சினிமா

வீரத்திருவிழா

Published On 2017-08-29 11:45 IST   |   Update On 2017-08-29 11:45:00 IST
தமிழில் ஜல்லிக்கட்டை வைத்து தயாரிக்கப்பட்ட முதல் படமாக உருவாகியிருக்கும் ‘வீரத்திருவிழா’ படத்தின் முன்னோட்டம்.
இறைவன் சினி கிரியே‌ஷன்ஸ் நிறுவனம் சார்பாக சி.செல்வகுமார் தயாரிப்பில் வெளிவர இருக்கும் படம் ‘ஒரு கனவு போல’. இந்த நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பு ‘வீரத்திருவிழா’.

இந்த படத்தில் புதுமுகம் சத்யா அவருடன் செல்வம், செல்வா ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். கதாநாயகியாக தேனிகா அறிமுகமாகிறார். இவர்களுடன் பொன்வண்ணன், சிந்தியா, நசிர், காதல் சுகுமார் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு - ஹார்முக், இசை - ஈ.எஸ்.ராம், எடிட்டிங் - சதிஷ், தயாரிப்பு - சி.செல்வகுமார், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - விஜய்முரளிதரன் (எ) வைரமணி.



இந்த படம் முழுக்க முழுக்க ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. 5 இளைஞர்கள் ஜல்லிக்கட்டில் ஈடுபட்டு அதில் வென்று ஊருக்கு எப்படி நல்ல பெயரை எடுத்து தருகிறார்கள் என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை. ஊரின் பஞ்சாயத்து தலைவராக பொன்வண்ணன் நடித்துள்ளார். ஜல்லிக்கட்டு தடை காரணமாக தாமதமாக வெளிவரும் இந்த படமே தமிழில் ஜல்லிக்கட்டை வைத்து தயாரிக்கப்பட்ட முதல் படம்.

முழுக்க முழுக்க கிராமப்புற மக்களின் வாழ்வியலை சொல்லும் படமாக ‘வீரத்திருவிழா’ உருவாகி உள்ளது.

காரைக்குடி, அமராவதி புதூர், சிராவயல், ஆராவயல், நேமம், மற்றும் மேட்டூர் பெரியதண்டா போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது” என்றார்.

Similar News