சினிமா

12-12-1950

Published On 2017-08-24 08:08 GMT   |   Update On 2017-08-24 08:09 GMT
ரஜினியின் தீவிர ரசிகர் கதையாக உருவாகியிருக்கும் ‘12-12-1950’ படத்தின் முன்னோட்டம்.
ஜியோஸ்டார் நிறுவனம் சார்பில் கோட்டீஸ்வர ராஜு தயாரிக்க கபாலி செல்வா எழுதி இயக்கி நடித்திருக்கும் படம் ‘12-12-1950’.

ரஜினியின் பிறந்த தேதியை இந்த படத்துக்கு தலைப்பாக வைத்துள்ளனர். இது ரஜினியின் தீவிர ரசிகர் பற்றிய கதை.

படம் பற்றி கபாலி செல்வா கூறுகிறார்...

“ ரஜினி ரசிகனுக்கு அவரது படத்தை ரிலீஸ் ஆகும் நாளில் பார்க்க முடியாத நிலை ஏற்படுகிறது. அதன் பிறகு என்ன நடக்கிறது. என்பது மீதி கதை. கதை ‘ஓகே’ ஆனவுடன் ரஜினி சாரிடம் போய் ஆசீர்வாதம் வாங்கினேன்.

இதில் தம்பி ராமையா மிகவும் ஒத்துழைப்பு கொடுத்து 9 கெட்டப்பில் நடித்தார். யோகி பாபு, எம் எஸ் பாஸ்கர், ரமேஷ் திலக், குமரவேல், ஆதவன் ஆகியோரும் சிறப்பாக நடித்து இருக்கிறார்கள். யாரும் சம்பளம் பற்றி கவலைப்படவில்லை.

40 ஆண்டுகளாக நான் ரஜினி ரசிகன். 28 வருடங்களுக்கு முன்பு எனக்கு நடந்த ஒரு சம்பவத்தையும் இதில் வைத்திருக்கிறேன். கபாலி ரஜினி கெட்டப்பில் நடித்திருக்கிறேன்.



இதற்கு முன்பு ‘கோல் மால்’ என்ற படத்தை செல்வா என்ற பெயரில் இயக்கினேன். ஒரு ரஜினி ரசிகனாக கபாலி செல்வா என என் பெயரை மாற்றி இருக்கிறேன்.

இந்த கதைக்கு நாயகி யாரும் இல்லை. நகைச் சுவை கலந்து உணர்ச்சி பூர்வமாக இதை சொல்லி இருக்கிறோம். எல்லோரையும் இது கவரும்” என்றார்.

இந்த படத்தின் டீசரை சமீபத்தில் கபாலி செல்வா வெளியிட்டார். நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் கோட்டீஸ்வர ராஜு மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News