சினிமா

களரி

Published On 2017-08-22 08:03 GMT   |   Update On 2017-08-22 08:03 GMT
கிரண்சந்த் இயக்கத்தில் கிருஷ்ணா, வித்யா ப்ரதீப், சம்யுக்தா மேனன் நடிப்பில் இளைஞனின் வாழ்க்கை போராட்டமாக உருவாகியிருக்கும் ‘களரி’ படத்தின் முன்னோட்டம்.
நட்சத்திரா மூவி மேஜிக் என்ற பட நிறுவனம் சார்பில் செனித் கெலோத் தயாரித்திருக்கும் படம் ‘களரி’.

இந்த படத்தில் கிருஷ்ணா, வித்யா ப்ரதீப், சம்யுக்தா மேனன், எம். எஸ். பாஸ்கர், ஜெய பிரகாஷ், பிளாக் பாண்டி, சென்றாயன் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு - ஆர்.பி.குருதேவ், படத்தொகுப்பு - பிரபாகர், இசை - வி.வி. பிரசன்னா, கலை - நந்தன், சண்டைபயிற்சி - ஸ்டன்னர் ஷாம், நடனம் - ராஜூ பாஸ்கர், கல்சாமணி, தயாரிப்பு - செனித் கெலோத், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - கிரண்சந்த்.

படம் பற்றி இயக்குநர் கிரண் சந்த் பேசும் போது, ‘களரி’ என்றால் தற்காப்புகலை என்று அனைவரும் கருதுகிறார்கள். ஆனால் களரி என்றால் போர்க்களம் என்பது தான் பொருள்.

அதை மையப்படுத்தி தான் இந்த தலைப்பு இருக்கிறது.



கொச்சி மாநகரத்தில் வாத்துருத்தி என்ற ஒரு பகுதியில் தமிழர்கள் அதிகம் வாழ்கிறார்கள். இந்த பகுதியை கதைக்களமாக கொண்டு தான் திரைக்கதையை அமைத்திருக்கிறேன். நடிகர் கிருஷ்ணா இதில் ஒரு சராசரி இளைஞராக நடித்திருக்கிறார். இவருக்கும், இவருடைய தந்தைக்கும் உள்ள தலைமுறை இடைவெளியால் ஏற்படும் சிக்கல்களும், அதைத்தொடர்ந்து நடைபெறும் உணர்ச்சிகரமான நிகழ்வுகளும் தான் படத்தின் கதை.

உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, காதல், சென்டி மெண்ட், காமெடி, ஆக்‌ஷன் என அனைவரையும் கவரும் வகையில் ‘களரி’ உருவாகியிருக்கிறது” என்றார்.
Tags:    

Similar News