OTT

இந்த வார ஓடிடி ரிலீஸ்

Published On 2025-05-22 16:28 IST   |   Update On 2025-05-22 16:28:00 IST
  • இயக்குநர் ஹோசிமின் இயக்கத்தில் `சுமோ' என்கிற திரைப்படத்தில் நாயகனாக சிவா நடித்துள்ளார்.
  • பிரேம்ஜி கதாநாயகனாக நடித்த வல்லமை திரைப்படம் கடந்த மாதம் வெளியானது.

திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. பல திரைப்படங்களுக்கு திரையரங்கிள் கிடைக்காத வெற்றி ஓடிடி தளத்தில் வெளியான பிறகு கிடைகிறது. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாக உள்ளன என்பதைக் காணலாம்.

சுமோ

இயக்குநர் ஹோசிமின் இயக்கத்தில் `சுமோ' என்கிற திரைப்படத்தில் நாயகனாக சிவா நடித்துள்ளார். இப்படத்தில் பிரியா ஆனந்த் நாயகியாகவும் நடித்துள்ளார். இப்படம் கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. இப்படத்தில் யோகிபாபு, வி.டி.வி. கணேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மல்யுத்த வீரர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகி உள்ள இப்படத்தில், மல்யுத்த வீரர் யோஷினோரி தாஷிரோவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் நாளை டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

Full View

வல்லமை

பிரேம்ஜி கதாநாயகனாக நடித்த வல்லமை திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. பிரேம்ஜி மற்றும் அவரது மகள் சென்னையில் வாழ்ந்து வருகின்றனர். இவரது மகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார் அதற்கு காரணமாக இருப்பவர்களை பிரேம்ஜி பழி வாங்குகிறார் என்பதே படத்தின் ஒன்லைனாகும்.இப்படத்தை பேட்லர்ஸ் சினிமா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தை கருப்பையா முருகன் எழுதி இயக்கி தயாரித்தும் உள்ளார். திரைப்படம் நாளை ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

Full View

ஹார்ட் பீட் சீசன் 2

ஹாட்ஸ்டாரில் வெளியாகி ஹார்ட் பீட்  இணைய தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இத்தொடர் ஒரு மருத்துவமனையில் நடக்கும் வாழ்க்கை முறை, அங்கு இருக்கும் நபர்களின் காதல், நட்பு, தொழில் இடையே உள்ள போட்டி பொறாமையை காட்டும் விதமாக அமைந்தது. இந்நிலையில் இத்தொடரின் சீசன் 2 இன்று முதல் ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமாகிறது. தீபா பாலு, அனுமோல் , சாருகேஷ், அமித் பார்கவ் இத்தொடரில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Full View

ஹண்ட்

பாவனா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிப்பில் வெளியானது தி ஹண்ட் என்ற மலையாள திரைப்படம். இப்படத்தில் ஒரு தடயவியல் மருத்துவர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ஒரு கொலை வழக்கில் பல திடுக்கிடும் உண்மைகளை பாவனா கண்டுப்பிடிக்கிறார் இதைத் தொடர்ந்து இந்த படம் நகர்கிறது. இப்படத்தில் பாவனாவுடன் ரெஞ்சி பானிக்கர், சந்துனாத் , டெயின் டேவிஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் நாளை மனோரமா மேக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

Full View

Fountain of Youth

ஜான் கிரான்சின்சிகி மற்றும் நடாலி போர்ட்மேன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் Fountain of Youth. இப்படம் ஒரு ஃபேண்டசி கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. இப்படத்தை கய் ரிச்சி இயக்கியுள்ளார். இப்படம் நாளை Apple TV+ வெளியாகிறது.

Full View

Tags:    

Similar News