null
சக்தி திருமகன் முதல் அக்யூஸ்ட் வரை: இந்த வார OTT அப்டேட்
- விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த மாதம் 19-ந்தேதி வெளியான படம் 'சக்தி திருமகன்'.
- கன்னட இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கியுள்ள இப்படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
திரையுலகில் ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீசாகி வருகின்றன. திரையரங்குகளை போலவே ஓ.டி.டி. தளங்களிலும் ஏராளமான படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இந்த வாரம் எந்த திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் எந்தெந்த ஓ.டி.டி தளங்களில் வெளியாகி உள்ளன என்பதைக் காணலாம்.
சக்தி திருமகன்:
விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த மாதம் 19-ந்தேதி வெளியான படம் 'சக்தி திருமகன்'. ஆக்ஷன், திரில்லர் கதைக்களத்தில் வெளியாகி அமோக வரவேற்பு பெற்ற இப்படம் நாளை ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது.
ஓஜி:
தெலுங்கில் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படங்களுள் ஒன்று, தே கால் ஹிம் ஓஜி. இப்படத்தில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்திருந்தார். இந்த படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது.
கிஷ்கிந்தாபுரி:
தெலுங்கில் வெளிவந்த ஹாரர் திரைப்படம் 'கிஷ்கிந்தாபுரி'. அனுபமா பரமேஸ்வரி, சாய் ஸ்ரீனிவாஸ் பெல்லம்கொண்டா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம், தமிழ் டப்பிங்கில் நாளை ஜீ5 ஓடிடியில் வெளியாக உள்ளது.
பறை இசை நாடகம், ராம்போ சர்கஸ்:
பறை இசையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட பயோகிராஃபி திரைப்படம் 'tales of tradition : parai isai nadagam'. இப்படம் நாளை சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. கன்னட மொழி படமான ராம்போ சர்கஸும் நாளை வெளியாக உள்ளது.
அக்யூஸ்ட்:
இயக்குநர் ஏ.எல். விஜய்யின் சகோதரர் ஏ.எல். உதயா கதாநாயகனாக நடித்துள்ள படம் 'அக்யூஸ்ட்'. கன்னட இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கியுள்ள இப்படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். குற்றவாளியை பேருந்து மூலம் சிறைக்கு கொண்டு செல்லும் போலீஸ் அதிகாரி. அப்போது குற்றவாளியை கொலை செய்ய முயற்சிகள் நடைபெறுகிறது. குற்றவாளி தப்பித்தாரா? இல்லையா? என்ன ஆனது என்பதே இப்படத்தின் கதைக்களம். இப்படம் நாளை ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
இதனிடையே 20-க்கும் மேற்பட்ட வெப் சீரிஸ்களும் ஆங்கிலம், இந்தி திரைப்படங்களும் ஓ.டி.டி.தளத்தில் நாளை வெளியாக உள்ளது.