பொதுவாக நடிகைகள் படவாய்ப்பு இல்லாமல் கவர்ச்சிக்கு மாறும் நிலையில், கவர்ச்சி இருந்தால் நடிக்க தயார் என்று கூறும் நாயகியை பார்த்திருக்கிறீர்களா என்று இயக்குநர் ஒருவர் ஆச்சரியப்பட்டுள்ளாராம். #Gossip
இப்படி ஒரு நடிகையா? ஷாக் கொடுக்கும் இயக்குநர்
பதிவு: ஏப்ரல் 20, 2019 15:09
தமிழ் சினிமாவில் தொடக்கத்தில் பெரிய வரவேற்பு கிடைக்காவிட்டாலும், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு பிறகு தமிழ் ரசிகர்களை கவர்ந்த மூன்றெழுத்து நடிகை, பெண் இயக்குநர் படத்தில் நடித்து சமீபத்தில் வெளியான படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்ததாம். படத்தில் நாயகி படு கவர்ச்சியாக நடித்திருந்தாராம்.
இந்த நாயகியா இப்படி என்று ரசிகர்கள் கேட்டு வந்த நிலையில், அவரது அடுத்தடுத்த படங்கள் எல்லாம் வித்தியாசமானதாக இருக்கும் அவரே கூறினாராம்.
நாயகியை சந்தித்து கதை சொல்லப் போகும் இயக்குநர்களிடம் நாயகி படத்தில் கவர்ச்சியான சீன்கள் இருக்கிறதா? இரட்டை அர்த்த வசனங்கள் இருக்கிறதா? என்றுதான் முதலில் விசாரிக்கிறாராம். இருக்கிறது என்றால், உடனே கால்ஷீட் கொடுத்து விடுகிறாராம். இல்லையென்றால், சில கவர்ச்சியான காட்சிகளை படத்தில் சேர்த்துக் கொள்ள சொல்கிறாராம். இப்படி ஒரு நாயகியா என்று இயக்குநர் ஆச்சரியப்படுகிறாராம்.