சினிமா செய்திகள்
null

75 வயசுல கூலிங் கிளாஸ் போட்டு ஸ்லோ மோஷன்ல நடக்குற என்னை ஏன் கூப்பிட்டீங்க? - ரஜினிகாந்த்

Published On 2025-07-12 10:52 IST   |   Update On 2025-07-12 16:57:00 IST
  • வேள்பாரி புத்தகத்தின் வெற்றிப் பெருவிழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது
  • வேள்பாரி 1,00,000' வெற்றிச் சின்னத்தை நடிகர் ரஜினிகாந்த் திறந்து வைத்தார்.

CPIM கட்சியின் எம்.பி சு.வெங்கடேசன்  எழுதிய வீரயுக நாயகன் வேள்பாரி புத்தகம் ஒரு லட்சம் பிரதிகளைத் தாண்டி விற்பனையில் வரலாற்றுச் சாதனை படைத்திருக்கிறது.

இந்நிலையில், வேள்பாரி புத்தகத்தின் வெற்றிப் பெருவிழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், 'வேள்பாரி 1,00,000' வெற்றிச் சின்னத்தை நடிகர் ரஜினிகாந்த் திறந்து வைத்தார். அப்போது அவர் மிகவும் நகைச்சுவையாக பேசினார். அவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் பேசியதாவது

"நிறைய சொல்ல வேண்டும் என அறிவு சொல்லும். எப்படிப் பேசவேண்டும் என திறமை சொல்லும். எவ்வளவு பேச வேண்டும் என அரங்கம் சொல்லும். எதைப் பேசவேண்டும், பேசக்கூடாது என அனுபவம் சொல்லும். இந்த விழாவுக்காக சு.வெங்கடேசன் என்னை அப்ரோச் பண்ணிய விதம் ரொம்ப பிடித்திருந்தது.

விகடனில் அதிகம் கிழித்தது என்னைத்தான், இருந்தாலும் நட்பில் எந்த விரிசலும் இல்லை. இந்த விழாவிற்கு நடிகரை அழைக்க வேண்டுமானால் சிவக்குமாரை அழைத்திருக்கலாம். அவர் எவ்வளவு படித்திருக்கிறார், மகாபாரதத்தை இந்த வயதிலும் 6 மணி நேரம் விடாமல் அதைப்பற்றி பேசுகிறார்.ஹேட்ஸ் ஆஃப் டூ ஹிம். சரி அவர் வேண்டாம் நடிகர் கமல்ஹாசனை அழைத்திருக்கலாம் எவ்வளவு அறிவாளி, திறமைசாலி. அதை விட்டுவிட்டு 75 வயதில் கூலிங் கிளாஸ் அணிந்துக் கொண்டு ஸ்லோ மோஷனில் நடந்து வரும் என்னை ஏன் அழைத்தார்கள் என தெரியவில்லை." என மிகவும் நகைச்சுவையாக கூற அரங்கமே சிரிப்பலையால் நிரம்பியது.

Tags:    

Similar News