சினிமா செய்திகள்

தவெக தலைவர் விஜயின் அரசியல் பிரவேசம் குறித்து பேசிய விஜய் ஆண்டனி

Published On 2025-11-20 19:26 IST   |   Update On 2025-11-20 19:26:00 IST
  • விஜய் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
  • விஜய் பிரசாரத்தை தற்காலிகமாக நிறுத்தினார்.

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கரூரில் பிரசாரம் செய்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதனால் விஜய் பிரசாரத்தை தற்காலிகமாக நிறுத்தினார்.

இதற்கிடையே சென்னையில் சமீபத்தில் நடந்த த.வெ.க. சிறப்பு பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் விஜய் கலந்து கொண்டு பேசும்போது, எனது அரசியல் பயணம் இன்னும் வேகமாக இருக்கும் என்றும், தி.மு.க. மீது கடும் விமர்சனத்தையும் முன்வைத்து பேசினார்.

அப்போது, கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், நாமக்கல் மற்றும் கரூரில் பிரசாரம் செய்துவிட்டதால் அருகில் உள்ள மாவட்டமான சேலத்தில் இருந்து மீண்டும் பிரசாரத்தை தொடங்குமாறு விஜய்யிடம் விருப்பம் மற்றும் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.

அந்த வகையில் சேலத்தில் விஜய் சுற்றுப்பயணத்திற்கு அனுமதி அளிக்கக் கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் த.வெ.க.-வினர் மனு அளித்துள்ளனர். காவல்துறை அனுமதியை பொறுத்து தேதியை இறுதி செய்ய விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், விஜயின் அரசியல் பிரவேசம் குறித்து நடிகர் விஜய் ஆன்டனியிடம் செய்தியர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், "அரசியலில் எத்தனைபேர் போட்டியிட்டாலும் மகிழ்ச்சி தான். அதனை ஏன் போட்டியாக பார்க்க வேண்டும்? விஜய்யும் வரட்டும், அவரைப் போல் இன்னும் பலரும் வரட்டும். மக்களுக்கு சேவை செய்யட்டும்" என்று கூறினார்.

Tags:    

Similar News