சினிமா செய்திகள்

VIDEO: 'புஷ்பா 2' கூட்டநெரிசலில் காயமடைந்த சிறுவனை மருத்துவமனைக்கு சென்று சந்தித்த அல்லு அர்ஜுன்

Published On 2025-01-07 12:06 IST   |   Update On 2025-01-07 12:23:00 IST
  • பேகம்பேட்டில் உள்ள கிம்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் சிறுவன் ஸ்ரீதேஜை அல்லு அர்ஜுன் சந்திக்க சென்றுள்ளார்.
  • தெலுங்கானா மாநில திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் (FDC) தலைவர் தில் ராஜுவும் உடனிருந்தார்.

 தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் கடந்த மாதம் புஷ்பா 2 திரைப்படம் வெளியானது.

அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் பலியானார். அவரது மகன் ஸ்ரீதேஜ் படுகாயம் அடைந்து செகந்திராபாத்தில் உள்ள கிம்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சிறுவனைப் பார்க்க நடிகர் அல்லு அர்ஜுன் செல்ல உள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் இன்று [செவ்வாய்க்கிழமை] பேகம்பேட்டில் உள்ள கிம்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் சிறுவன் ஸ்ரீதேஜை அல்லு அர்ஜுன் சந்திக்க சென்றுள்ளார்.

மருத்துவமனையில் அல்லு அர்ஜுன் இருக்கும் வீடியோக்கள் மற்றும் படங்கள் வெளியாகி வருகின்றன, வெளிவந்தன. அவருடன் அவரது குழுவினர் உடன் இருந்தனர்.

அல்லு அர்ஜுன் மருத்துவமனைக்கு வருகை தந்தபோது, தெலுங்கானா மாநில திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தின் (FDC) தலைவர் தில் ராஜுவும் உடனிருந்தார். சிகிச்சை பெற்று வரும் சிறுவனை சந்தித்து அல்லு அர்ஜுன் நலம் விசாரித்தார்.

அங்கிருந்த டாக்டர்களிடம் சிறுவனின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். சிறுவனின் தந்தை பாஸ்கரனுக்கு ஆறுதல் கூறினார். 20 நிமிடங்கள் ஆஸ்பத்திரியில் இருந்த அல்லு அர்ஜுன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

அல்லு அர்ஜுன் வருகையை முன்னிட்டு மருத்துவமனையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. முன்னதாக ஜனவரி 5 ஆம் தேதி மருத்துவமனைக்குச் செல்ல திட்டமிட்டிருந்தார், ஆனால் திட்டம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News