சினிமா செய்திகள்

பூகோளத்தின் ஆதிவேர் காக்க ஓர் இனம் தாய்மொழி பேணவேண்டும் - வைரமுத்து

Published On 2024-02-21 05:12 GMT   |   Update On 2024-02-21 05:12 GMT
  • இன்று உலக தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது.
  • கவிஞர் வைரமுத்து தாய்மொழி தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சர்வதேச தாய்மொழி தினம் உலகம் முழுக்க இன்று கொண்டாடப்படுகிறது. ஒவ்வொருத்தரும் தங்களின் தாய்மொழியை பேணி பாதுகாப்பது மற்றும் அதன் பெருமையை பரைசாற்றும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21-ம் தேதி சர்வதேச தாய்மொழி தினமாக கொண்டாட ஐக்கிய நாடுகள் சபை ஒப்புதல் வழங்கியது.

அதன்படி சர்வதேச தாய்மொழி தினத்தன்று தமிழ் திரையுலகின் முன்னணி கவிஞர்களில் ஒருவரும், பாடலாசிரியருமான வைரமுத்து தனது வாழ்த்து மற்றும் அச்சத்தை பகிர்ந்து கொள்வதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

"இன்று

உலகத் தாய்மொழித் திருநாள்

வாழ்த்து அச்சம் இரண்டையும்

பகிர்ந்து கொள்கிறேன்

தாய் என்ற அடைமொழிகொண்ட

சொற்களெல்லாம் உயர்ந்தவை;

உலகத் தன்மையானவை மற்றும்

உயிரோடும் உடலோடும் கலந்தவை

தாய்நாடு தாய்ப்பால்

தாய்மொழி இவை எடுத்துக்காட்டுகள்

ஆனால்,

உலகமயம் தொழில்நுட்பம்

என்ற பசிகொண்ட பற்கள் இரண்டும்

தாய்மொழியின் தசைகளைத் தின்னுகின்றன

உலக தேசிய இனங்கள்

விழிப்போடிருக்கவேண்டிய

வேளை இது

அரசு ஆசிரியர் பெற்றோர்

மாணவர் ஊடகம் என்ற ஐம்பெரும்

கூட்டணிகளால் மட்டுமே

இந்தப் பன்னாட்டுப்

படையெடுப்பைத் தடுக்கமுடியும்

சரித்திரத்தின் பூகோளத்தின்

ஆதிவேர் காக்க

ஓர் இனம்

தாய்மொழி பேணவேண்டும்

எங்கள் தாய்மொழி

எங்கள் அடையாளம்

மற்றும் அதிகாரம்," என்று பதிவிட்டுள்ளார்.



Tags:    

Similar News