சினிமா செய்திகள்

வாரணம் ஆயிரம் படத்தின் உதவி இயக்குனர் டூ கங்குவா ப்ரோமோஷன் - சந்தீப் கிஷன் நெகிழ்ச்சி பதிவு

Published On 2024-10-29 13:36 IST   |   Update On 2024-10-29 13:36:00 IST
  • தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
  • கங்குவா திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராவார் சந்தீப் கிஷன். சில மாதங்களுக்கு முன் வெளியான தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் இடம் பெற்ற காட்சிகள் மற்றும் பாடல்கள் மக்களால் மிகப்பெரியளவில் ரசிக்கப்பட்டது.

தமிழில் மாநகரம், கசடதபற, மாயவன், கேப்டன் மில்லர் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் கங்குவா திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

திரைப்படம் வரும் நவம்பர் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நேற்று விசாகப்பட்டனத்தில் நடைப்பெற்றது அதில் கங்குவா படக்குழு மற்றும் சந்தீப் கிஷன் விழாவில் கலந்துக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் சூர்யா தெலுங்கு ரசிகர்களுக்கு தனது அன்பை வெளிப்படுத்தினார். அங்கு கேட்கப்பட்ட ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். சூர்யா கூறிய பதிலை சந்தீப் கிஷன் அதை தெலுங்கில் மொழிப்பெயர்த்து கூறினார்.

இந்த நிகழ்வில் சூர்யாவை சந்தித்த அனுபவத்தை குறித்து அவரது எக்ஸ் தளத்தில் ஒரு நெகிழ்ச்சியான பதிவை பதிவிட்டுள்ளார். அதில் அவர் "என்னுடைய முதல் ஹீரோ சூர்யா அண்ணா. அவர் நடித்த வாரணம் ஆயிரம் திரைப்படத்தின் 16-வது உதவி இயக்குனராக பணியாற்றியதில் இருந்து நேற்று கங்குவா திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் என்னை அவருடைய சொந்தமாக நினைத்தது வரை அவர் என்றும் அதேப் போல் தான் உள்ளார். தன்மை, மனிதாபிமானம், அடக்கம், கடின உழைப்பு ஆகிய அனைத்திருக்கும் சரியான முன்னுதாரணமாக இருப்பதற்கு மிக்க நன்றி" என உருக்கமான பதிவை பதிவிட்டுள்ளார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News