சினிமா செய்திகள்
null

கதாநாயகனாக அறிமுகமாகும் லோகேஷ் கனகராஜ் படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு

Published On 2025-11-01 20:50 IST   |   Update On 2025-11-02 15:53:00 IST
"கேப்டன் மில்லர்" படத்தின் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்குகிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ, கூலி போன்ற கேங்ஸ்டர் படங்களை இயக்கி பெயர் பெற்றவர் லோகேஷ் கனகராஜ்.

இவரது இயக்கத்தில் அடுத்த என்ன படம் வெளியாகும் என ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த சில மாதங்களாகவே லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார் என கூறப்பட்டு வந்தது.

இதற்கிடையே , இந்தப் படம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. "கேப்டன் மில்லர்" படத்தின் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் புதிய கேங்ஸ்டர் படம் உருவாகிறது. இந்தப் படத்தின் பூஜை கடந்த அக்டோபர் 23 அன்று நடைபெற்றதாக தகவல் வெளியானது.

இந்தப் படத்தில்தான் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்த படத்திற்காக அவர் சண்டை மற்றும் தற்காப்பு பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அதோடு இப்படத்திற்காக அவர் புது கெட்அப்பில் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.

படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது என்றும் ஜனவரி மாதத்திற்குள் முழு படப்பிடிப்பும் முடியும் என்றும் கூறப்படுகிறது.

இந்த படத்தில் லோகேஷ்க்கு ஜோடியாக பாலிவுட் நடிகை வாமிகா கபி ஒப்பந்தம் ஆகி உள்ளார். இவர் 2016-ல் "மாலை நேரத்து மயக்கம்" என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாகும் இப்படத்திற்கு "DC" என பெயரிடப்பட்டுள்ளது.

Full View
Tags:    

Similar News