சினிமா செய்திகள்

பிரியாணியும் தூக்கமும் சரி செய்ய முடியாதது எதுவும் இல்லை - கார் விபத்தில் சிக்கிய விஜய் தேவரகொண்டா பதிவு

Published On 2025-10-07 02:30 IST   |   Update On 2025-10-07 02:30:00 IST
  • புட்டபர்த்திக்கு சென்றுவிட்டு ஐதராபாத் திரும்பியபோது நடிகர் விஜய் தேவரகொண்டா சென்ற கார் விபத்தில் சிக்கியுள்ளது.
  • செய்திகள் உங்களை மன அழுத்தத்துக்கு உள்ளாக்க விடாதீர்கள்.

புட்டபர்த்திக்கு சென்றுவிட்டு ஐதராபாத் திரும்பியபோது நடிகர் விஜய் தேவரகொண்டா சென்ற கார் விபத்தில் சிக்கியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் கத்வால் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்றபோது கால்நடைகளை ஏற்றிச் சென்ற வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

கார் சேதமடைந்த நிலையில், விஜய் தேவரகொண்டா காயங்கள் இன்றி உயிர் தப்பியதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் தான் நலமாக உள்ளதாக விஜய் தேவரகொண்டா தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில், எல்லாமே நல்லபடியாக இருக்கிறது.

கார் சேதமடைந்தது, ஆனால் நாங்கள் அனைவரும் நலமாக இருக்கிறோம். ஒரு ஸ்ட்ரென்த் உடற்பயிற்சியும் செய்துவிட்டு இப்பதான் வீட்டிற்குத் திரும்பி வந்தேன்.

என் தலை வலிக்கிறது, ஆனால் பிரியாணி மற்றும் தூக்கத்தால் சரி செய்ய முடியாதது என்று எதுவும் இல்லை. அதனால் உங்களுக்கெல்லாம் என் பெரிய அணைப்புகளையும் அன்பையும் கொடுக்கிறேன். செய்திகள் உங்களை மன அழுத்தத்துக்கு உள்ளாக்க விடாதீர்கள்." என்று தெரிவித்தார்.  

விஜய் தேவரகொண்டாவுக்கும் நடிகை ராஷ்மிக்கா மந்தனாவுக்கும் அண்மையில் ஐதராபாத்தில் உள்ள இல்லத்தில் நிச்சயதாரதம் நடந்ததாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News