சினிமா செய்திகள்

பிறந்தநாளில் நற்பணி மன்றம் தொடங்கிய விஷ்ணு விஷால்

Published On 2023-07-18 11:47 IST   |   Update On 2023-07-18 11:47:00 IST
  • விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார்.
  • இவர் தனது பிறந்தநாளில் நற்பணி மன்றத்தை தொடங்கியுள்ளார்.

வெண்ணிலா கபடி குழு, குள்ளநரி கூட்டம், நீர்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை, ராட்சசன், எஃப்ஐஆர் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் விஷ்ணு விஷால். இவர் தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.

விஷ்ணு விஷால் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு ரசிகர்கள், திரைப்பிரலங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் அவருடைய பிறந்தநாளில் நற்பணி மன்றம் தொடங்கியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வணக்கம்! என்மீது அன்பு கொண்ட தம்பிகள் பலர், எனது திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும் சமயங்களிலும், எனது பிறந்தநாளிலும் மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு நற்பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார்கள். அந்த நற்பணிகளுக்கு ஒரு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த பிறந்தநாள் முதல் 'விஷ்ணு விஷால் நற்பணி மன்றம்' என்ற அமைப்பை தொடங்கி இருக்கிறோம்.!



இனி எனது ரசிகர்களின் செயல்பாடுகள் அனைத்தும் 'விஷ்ணு விஷால் நற்பணி மன்றம்' மூலமாக ஒருங்கிணைக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். அடிப்படையில் நான் விளையாட்டுத் துறையில் இருந்து வந்தவன் என்ற முறையில் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு உதவிகளை தொடர்ந்து செய்துவருகிறோம்.

இதில், ஹேமமாலினி ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கத்தையும், திவ்யா தடைதாண்டும் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கத்தையும், ஸ்டாலின் ஜோஸ் டெக்கத்லானில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்று சாதனை படைத்துள்ளனர். இந்த முயற்சியை மேலும் பெரிதாக்கி; விளையாட்டு வீரர்களுக்கு உதவும் வகையில் ஒரு செயல் திட்டத்தைத் தீட்டி வருகிறோம். அந்தத் திட்டம் பற்றிய அறிவிப்பை விரைவில் வெளியிட இருக்கிறோம், என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி! என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News