சினிமா செய்திகள்
null

உங்கள் சுய அடையாளத்தை எக்காரணம் கொண்டும் விட்டு விடாதீர்கள்: விஜய் பேச்சு.. லைவ் அப்டேட்ஸ்

Published On 2023-06-17 11:02 IST   |   Update On 2023-06-17 14:08:00 IST
  • நடிகர் விஜய் இன்று மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ரொக்க பரிசு வழங்குகிறார்.
  • இதற்கான ஏற்பாடு நீலாங்கரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது.

விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக 10. 12-ம் வகுப்புத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ரொக்க பரிசு வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெறவுள்ளது.

இதற்காக நீலாங்கரை பகுதியில் பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விஜய் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை நேரில் சந்தித்து சான்றிதழையும், ரொக்கப் பரிசையும் வழங்க இருக்கிறார். தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களை 234 தொகுதிகளிலும் கணக்கெடுத்து அவர்களைப் பெற்றோர்களுடன் நீலாங்கரை பகுதியில் இருக்கும் ஆர்.கே. கன்வென்சன் சென்டருக்கு வரவழைக்கப்பட்டது. பெற்றோர்கள், மாணவர்களுக்கு உரிய அடையாள அட்டை வழங்கப்பட்டிருக்கிறது.


விஜய்க்கு பரிசளித்த மாற்றுத் திறனாளி மாணவன்

இந்த நிகழ்ச்சிக்காக தனது கட்அவுட்கள் எதுவும் வைக்கக்கூடாது என்று விஜய் தரப்பில் கூறப்பட்டிருப்பதால் சுவர் ஓவியங்கள் வரையும் பணியில் ரசிகர்கள் ஈடுப்பட்டிருந்தனர். இந்நிலையில், நடிகர் விஜய் தனது இல்லத்திலிருந்து நீலாங்கரை மண்டபத்திற்கு காரில் சென்றார். இவருடன் ரசிகர்கள் தங்களது இரு சக்கர வாகனங்களில் பின் தொடர்ந்து சென்றனர்.பின் அவர் நீலாங்கரை தனியார் அரங்கத்திற்கு சென்றார். அங்கு விஜய்க்கு மாற்றுத் திறனாளி மாணவர் ஒருவர் பரிசு வழங்கினார். 

இதையடுத்து மாணவர்கள் மத்தியில் நடிகர் விஜய் பேசி வருகிறார்.



Full View




2023-06-17 08:38 GMT

ஒவ்வொரு மாணவ, மாணவிகளும் அவர்கள் பெற்றோரிடம் சென்று இனிமேல் பணம் வாங்கிக்கொண்டு வாக்களிக்காதீர்கள் என்று கூறிப்பாருங்கள். முயற்சி செய்து பாருங்கள். நீங்கள் கூறினால் நடக்கும் என எனக்கு நம்பிக்கை உள்ளது. நீங்கள் தான் அடுத்தடுத்த ஆண்டுகளில் முதல் முறை வாக்காளர்களாக வர உள்ளீர்கள். இது நடக்கும் போது தான் உங்கள் கல்வி முறை முழுமை அடைந்ததாக எடுத்துக் கொள்ளலாம்.

2023-06-17 08:13 GMT

நம் விரலை வைத்து நம் கண்ணை குத்துவது பற்றி கேள்விபட்டுள்ளீர்களா? அது தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. அது தான் நாமும் இப்போது செய்துகொண்டிருக்கிறோம். பணம் வாங்கிக்கொண்டு வாக்களிப்பது. உதாரணமாக ஒரு வாக்கிற்கு 1000 ரூபாய் என்று வைத்துக்கொள்ளுங்கள் ஒரு தொகுதியில் 1 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு கொடுக்கிறார்கள் என்றால் 15 கோடி ரூபாய் ஆகிறது. ஒருவர் 15 கோடி ரூபாய் செலவு செய்கிறார் என்றால் அவர் அதற்கு முன் எவ்வளவு சம்பாதித்து இருக்க வேண்டும். யோசித்து பாருங்கள். இதெல்லாம் பள்ளிகளில் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்.

2023-06-17 07:52 GMT

நீங்கள் தான் நாளைய வாக்காளர்கள். அடுத்தடுத்து புதிய நல்ல நல்ல தலைவர்களை நீங்கள் தான் தேர்ந்தெடுக்கப்போகிறீர்கள்.


2023-06-17 07:43 GMT

முடிந்தவரை படியுங்கள் எல்லோரையும் பற்றி தெரிந்துகொள்ளுங்கள் எல்லா தலைவர்கள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள். அம்பேத்கர், பெரியார், காமராஜரை பற்றி தெரிந்துகொள்ளுங்கள். நல்ல விஷயங்களை எடுத்துக்கொள்ளுங்கள் மற்றதை விட்டுவிடுங்கள். அறிவுரை கூறிய விஜய்

2023-06-17 07:14 GMT

நான் நடிகன் ஆகவில்லை என்றால் டாக்டராகியிருப்பேன் என்று கூற விரும்பவில்லை. என் கனவு எல்லாம் சினிமா, நடிப்பு தான் அதை நோக்கியே என் பயணம் போய் கொண்டிருந்தது.

2023-06-17 06:54 GMT

நாங்கள் விஜய் சாரை பார்ப்போம் என்று நினைத்தே பார்க்கவில்லை. விஜய்யை பார்த்ததும் இது கனவு மாதிரி இருக்கிறது என்று கூறினேன். ஆனால் இது கனவு இல்லை இது நினைவு தான். நன்றாக படியுங்கள் என்று விஜய் கூறினார் என்று மாணவி நெகிழ்ச்சியாக கூறினார்.

2023-06-17 06:45 GMT

1406 மாணவ- மாணவியருக்கு விஜய் ரூ.5000 தொகை மற்றும் சான்றிதழ் வழங்கி வருகிறார்.

2023-06-17 06:14 GMT

தொடர்ந்து நடிகர் விஜய் சாதனை படைத்த மாணவ- மாணவியர்களுக்கு சான்றிதழ் வழங்கி வருகிறார்.

2023-06-17 06:12 GMT

மாற்றுத்திறனாளியான மாணவி ஆர்த்திக்கு நடிகர் விஜய் மேடையில் இருந்து கீழே இறங்கி வந்து சால்வை அணிவித்து சான்றிதழ் வழங்கினார். மாணவி ஆர்த்தியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

2023-06-17 06:05 GMT

திண்டுக்கல் மாணவி நந்தினிக்கு வைர நெக்லஸ் பரிசளித்தார் நடிகர் விஜய்

Tags:    

Similar News