சினிமா செய்திகள்

மாமன்னன்

உதயநிதியுடன் பயணிக்கும் வடிவேலு.. ஓ இதுதான் விஷயமா?

Update: 2023-06-01 05:38 GMT
  • நடிகர் உதயநிதி ஸ்டாலின் தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘மாமன்னன்’.
  • இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெறவுள்ளது.

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'மாமன்னன்'. இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், இதில் மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.


மாமன்னன் 

'மாமன்னன்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'ராசா கண்ணு' மற்றும் 'ஜிகு ஜிகு ரெயில்' பாடலை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது. மேலும், ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று (ஜூன் 1) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.


மாமன்னன் போஸ்டர்

இதையடுத்து டிரைலர் மற்றும் ஆடியோ வெளியிட்டு விழாவில் ஏ.ஆர்.ரகுமானின் லைவ் கான்சர்ட் (Live Concert) நடைபெறவுள்ளதாகவும் படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவை உறுதி செய்யும் விதமாக படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. உதயநிதி காரை ஓட்டுவது போன்றும் வடிவேலு பின்னால் இருந்து பயணிப்பது போன்றும் உருவாகியுள்ள இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


Tags:    

Similar News