தலைவர் பாராட்டும்போது கிண்டலாக பேசுகிறாரா? உண்மையாக பேசுகிறாரா? என்று புரியவில்லை - நெல்சன்
- நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜெயிலர்’.
- இப்படத்தின் இசை வெளியிட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
'ஜெயிலர்' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை, நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியிட்டு விழாவில் இயக்குனர் நெல்சன் பேசியதாவது, இது என்னுடைய 4வது படம் ஆனால் இது என்னுடைய முதல் ஆடியோ லாஞ்ச். தலைவர் பாராட்டும்போது கிண்டலாக பேசுகிறாரா அல்லது உண்மையாக இருக்கிறாரா என்று எனக்கு இன்றுவரை புரியவில்லை.
படத்தில் மிகப்பெரிய நடிகர்கள் இருக்கிறார்கள். சிவராஜ்குமார் மற்றும் மோகன்லால் போன்ற கட்டுப்பாடு மற்றும் அனுபவம் வாய்ந்த நடிகர்கள் ஒரு பக்கம். மறுப்பக்கம் விடிவி கணேஷ் போன்ற கட்டுப்பாடு இல்லாத நடிகர்கள். இரண்டையும் நிர்வகிப்பது மிகப்பெரிய சவாலாக இருந்தது. ரஜினிகாந்த் சார் எனக்கு உதவினார்.. நன்றி சார். என்று பேசினார்.