சினிமா செய்திகள்
null

விக்ரம் பட பாணியில் டைட்டிலை வெளியிட்ட தளபதி 67 படக்குழு

Update: 2023-02-03 11:58 GMT
  • லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் தளபதி 67.
  • இப்படத்தின் டைட்டிலை படக்குழு வெளியிட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் தளபதி 67. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


 

தளபதி 67 படத்தில் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ,நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் ஆகியோர் நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

 


இப்படத்தின் டைட்டில் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தது. இந்நிலையில் அறிவித்தபடி தளபதி 67 படத்தின் டைட்டிலை விக்ரம் பட பாணியில் வீடியோவாக படக்குழு வெளியிட்டுள்ளனர். அதன்படி இப்படத்திற்கு லியோ (Leo - Bloody Sweet) என்று பெயரிடப்பட்டுள்ளனர். கையில் ஆயுதங்களுடன் விஜய் காட்சியளிக்கும் இந்த வீடியோ தற்போது லைக்குகளை குவித்து வைரலாகி வருகிறது.


Full View


Tags:    

Similar News