சினிமா செய்திகள்

சூர்யா

சூர்யா என்னுடைய நெருங்கிய நண்பர்.. மாதவன் உருக்கம்

Update: 2022-06-28 07:41 GMT
  • நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமாகியுள்ள படம் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்'.
  • இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் கதையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

பிரபல நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்'. இஸ்ரோ ராக்கெட் விஞ்ஞானி ஸ்ரீ நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த திரைப்படத்தை இயக்குவதோடு மட்டுமல்லாமல் அதில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். சாம் சிஎஸ் பின்னணி இசையமைத்துள்ள இப்படத்திற்கு சிர்ஷா ரே ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் ஜூலை 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்

இப்படத்தில் நடிகர்கள் சூர்யா மற்றும் ஷாருக்கான் ஆகியோர் கௌரவ வேடத்தில் நடித்துள்ளதாக மாதவன் முன்பே அறிவித்திருந்தார். ராக்கெட்ரி படம் திரைக்கு வர உள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் மாதவன் பேசியது சர்ச்சைக்குள்ளானது. அதன்பின் அதுகுறித்து விளக்கம் அளித்து மாதவன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.

மாதவன் - ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்

இந்நிலையில் தற்போது நடிகர் சூர்யா ராக்கெட்ரி ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் வீடியோவை மாதவன் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் விஞ்ஞானி நம்பி நாராயணனிடம், மாதவன் சூர்யாவை தன்னுடைய நெருங்கிய நண்பர் என்று அறிமுகப்படுத்திவைக்கிறார். நம்பி நாராயணன், தான் சூர்யா மற்றும் அவரின் தந்தை சிவகுமாரின் ரசிகன் என்று கூறுகிறார். இது வீடியோ குறித்து பதிவிட்டுள்ள மாதவன் நம்பி நாராயணன் சார் சூர்யா மற்றும் அவரது தந்தையின் படங்களின் தீவிர ரசிகர். என் சகோதரர் சூர்யாவால் மட்டுமே என்னை மிகவும் நன்றாக உணர முடியும் என்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Tags:    

Similar News