சினிமா செய்திகள்

ரிஹானா

வைர கடிகாரத்தால் கழுத்தை அலங்கரித்த பாப் பாடகி.. வைரலாகும் புகைப்படம்

Published On 2023-06-22 19:49 IST   |   Update On 2023-06-22 19:49:00 IST
  • அமெரிக்காவின் பிரபல பாப் பாடகியாக வலம் வருபவர் ரிஹானா.
  • இவர் தற்போது தன் காதலன் ராக்கி என்பவருடன் வாழ்ந்து வருகிறார்.

அமெரிக்காவின் பிரபல பாப் பாடகியாக வலம் வருபவர் ரிஹானா. இவர் பாடகியாக மட்டுமல்லாமல் நடிகை, பேஷன் டிசைனர் என பன்முகத் தன்மை கொண்டவராக திகழ்ந்து வருகிறார். இவர் குட் கியாள் கோன் பேட், ரேட்டட் ஆர், லவுட், டால்க் தேட் டால்க் போன்ற பல ஆல்பம் பாடல்கள் பாடி புகழ் பெற்றார். "Umbrella" என்ற இசை ஆல்பம் மூலம் இவர் முதல் கிராமி விருதை பெற்றார்.


கடந்த 2007-ஆம் ஆண்டு கிறிஸ் பிரவுன் என்பரை காதலித்து திருமணம் செய்து கொண்ட ரிஹானா கருத்து வேறுபாடு காரணமாக அவரை 2013-ஆம் ஆண்டு பிரிந்தார். பின்னர் ஹசன் ஜமீலுடன் வாழ்ந்து வந்த ரிஹானா அவரையும் விவாகரத்து செய்தார். இதையடுத்து ராக்கி என்பவரை காதலித்து வந்த ரிஹானா 2020-ஆம் ஆண்டு முதல் அவருடன் லிவ்விங் டூ கெதர் ரிலேஷன் ஷிப்பில் இருந்து வருகிறார். இவருக்கு கடந்த மே மாதம் ஆண் குழந்தை பிறந்த நிலையில் தற்போது மீண்டும் கர்ப்பமடைந்துள்ளார்.


இந்நிலையில், பாடகி ரிஹானா பாரிசில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அப்போது அவர் கழுத்தில் கைக்கடிகாரம் போன்று இருக்கும் வைர நெக்லஸ் ஒன்றை அணிந்திருந்தார். 30 கேரட் வைரங்களால் அலங்கரிக்கப்பட்ட இந்த நெக்லஸ் இந்திய மதிப்பின் படி ரூ. 5.7 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. ரிஹானாவின் நெக்லஸ் தான் தற்போது சமூக வலைதளத்தில் பேசுப்பொருளாக உள்ளது.

Tags:    

Similar News