சினிமா செய்திகள்

சல்மான் கான்

null

நடிகர் சல்மான்கானுக்கு 'ஒய் பிளஸ்' பாதுகாப்பு.. மும்பை போலீசார் முடிவு..

Published On 2022-11-01 15:56 IST   |   Update On 2022-11-01 15:59:00 IST
  • பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு அண்மையில் கொலை மிரட்டல் வந்தது.
  • இவருக்கு துப்பாக்கி வைத்து கொள்ளும் உரிமையை போலீசார் வழங்கியுள்ளதாக கூறப்பட்டது.

பஞ்சாப்பில் பிரபல பாடகர் சித்து மூஸ்வாலா கடந்த மே மாதம் மர்ம நபர்களால் சுட்டு கொலை செய்யப்பட்டார். இவரது கொலைக்கு பின்னால் பஞ்சாப் தாதாவான பிரபல லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் இருப்பதாக கூறப்படுகிறது. அதேவேளை, கடந்த மாதம் பிரபல இந்தி நடிகர் சல்மான் கான் மற்றும் அவரது தந்தை சலீம்கானுக்கு கொலை மிரட்டல் வந்தது. அவர்களுக்கு வந்த மிரட்டல் கடிதத்தில், சித்து மூஸ்வாலாவுக்கு ஏற்பட்ட கதியை சந்திப்பீர்கள் என கூறப்பட்டு இருந்தது.


சல்மான் கான்

இதையடுத்து நடிகர் சல்மான் கான் தான் வழக்கமாக பயன்படுத்தும் காரை குண்டுகள் துளைக்காதவாறு புல்லட் ப்ரூப் கண்ணாடிகளைக் கொண்டு பொறுத்தியுள்ளதாக தகவல் வெளியானது. தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு மராட்டிய மாநிலம் மும்பை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமம் கேட்டு விண்ணப்பித்த அவருக்கு துப்பாக்கி வைத்து கொள்ளும் உரிமை வழங்கப்பட்டுள்ளது என போலீஸ் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.


சல்மான் கான்

இந்நிலையில், நடிகர் சல்மான் கானுக்கு 'ஒய் பிளஸ்' பாதுகாப்பு வழங்க மும்பை போலீசார் முடிவு செய்துள்ளனர். மிரட்டல் கடிதம் வந்ததையடுத்து மாநில அரசால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Tags:    

Similar News