சினிமா செய்திகள்

மாமன்னன்

வாழ்வின் ஓச அது பறையோச.. கவனம் ஈர்க்கும் 'மாமன்னன்' பாடல்

Update: 2023-06-06 07:57 GMT
  • இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாமன்னன்’.
  • இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.

'கர்ணன்' படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் படம் 'மாமன்னன்'. இப்படத்தின் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.


இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து 'மாமன்னன்' படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில், அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் கலந்து கொண்டனர்.


இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'மன்னா மாமன்னா' பாடல் தற்போது வெளியாகியுள்ளது. 'பொறுத்தலின் வரிகளில் சலிப்படைந்து உடைத்தலின் வரிகளை எழுதுகிறபோது மட்டும் சுரக்கும் ஓர் பெருஞ்சுனை சுதந்திரம்' என்ற மாரி செல்வராஜ் வரிகளுடன் தொடங்கும் இப்பாடலின் வரிகளை அறிவு எழுதி பாடியுள்ளார். இதில், 'வானின் ஓச அது பறவை ஓச.. வாழ்வின் ஓச அது பறையோச' போன்ற அழுத்தமான வரிகள் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.Full View


Tags:    

Similar News