சினிமா செய்திகள்

லிடியன் நாதஸ்வரம்

உலக அரங்கில் லிடியனின் புதிய இசை முயற்சி

Published On 2022-06-14 17:44 IST   |   Update On 2022-06-14 17:44:00 IST
  • தனது இசைத்திறமையால் உலக அளவில் பிரபலமானவர் லிடியன் நாதஸ்வரம்.
  • இவர் தனது புதிய இண்டிபெண்டெண்ட் ஜாஸ் ஆல்பம் மூலம் உலக அரங்கில் கால் பதிக்கவுள்ளார்.

லிடியன் நாதஸ்வரம் தனது இசைத்திறமையால் உலக அளவில் பிரபலமானவர். உலகின் தலை சிறந்த கலைஞர் என்ற பட்டம் பெற்ற இவர் தனது முதல் இண்டிபெண்டெண்ட் ஜாஸ் ஆல்பமான 'குரோமாடிக் கிராமாடிக்' மூலம் உலக அரங்கில் முத்திரை பதிக்கவுள்ளார். லிடியனின் இசையமைப்பில் உலகெங்கிலும் உள்ள முன்னணி இசைக்கலைஞர்கள் இந்த ஆல்பத்தில் பணியாற்றியுள்ளனர். இந்த ஆல்பத்தில் மொத்தம் 12 பாடல்கள் உள்ளன.


இந்த ஆல்பத்தை பற்றிப் பேசிய லிடியன், 'உலக இசை அரங்கில் ஜாஸ் இசை படைப்புகள் வெகுவாக குறைந்து வருகின்றன. இந்தியாவில் ஜாஸ் இசைக்கலைஞர்கள் மிகக் குறைவு. இந்த முயற்சி ஜாஸ் இசைக்கு புத்துயிர் தரும் என்று நம்புகிறேன்' என்றார்.

உலக இசை தினத்தை முன்னிட்டு ஜூன் 21-ம் தேதி வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. இந்த ஆல்பம் சர்வதேச தளங்களிலும் கிடைக்கும் என்றும் பல்வேறு விருது விழாக்களுக்கு சமர்ப்பிக்கப்படும் என்றும் லிடியன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News