சினிமா செய்திகள்

பசவராஜ் பொம்மை - ரஜினிகாந்த்

null

கன்னடத்தின் மீதான அன்பை வெளிப்படுத்திவிட்டார் ரஜினி - முதல்வர் பசவராஜ் பொம்மை நெகிழ்ச்சி

Published On 2022-11-01 15:15 GMT   |   Update On 2022-11-01 15:20 GMT
  • மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு வழங்கப்பட்ட கர்நாடகா ரத்னா விருதை அவரது மனைவி அஸ்வினி பெற்றுக் கொண்டார்.
  • இதனை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, ரஜினிகாந்த் மற்றும் ஜுனியர் என்.டி.ஆர். வழங்கினர்.

கன்னட திரை உலகில் முன்னணி நடிகராக இருந்தவர் புனித் ராஜ்குமார். இவர் கடந்த ஆண்டு (2021) அக்டோபர் மாதம் 29-ந் தேதி மாரடைப்பு காரணமாக தனது 46 வயதில் உயிரிழந்தார். அவரது திடீர் மரணம் ரசிகர்கள், திரை உலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. புனித் ராஜ்குமார் மறைவையடுத்து அவரது கலைப்பணி மற்றும் சமூக சேவை ஆகியவற்றை கருத்திற்கொண்டு அவருக்கு உயரிய விருதான கர்நாடகா ரத்னா விருது வழங்கப்படும் என கர்நாடகா முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்தார்.


விருது பெற்ற புனித் ராஜ்குமார் மனைவி அஸ்வினி

மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு இந்த விருதை வழங்குவதற்காக, நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தொடர்ந்து ரஜினிகாந்த் விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக தனி விமானம் மூலம் இன்று பெங்களூர் சென்றார். இதையடுத்து நடிகர் புனித் ராஜ்குமாருக்கு வழங்கப்பட்ட கர்நாடகா ரத்னா விருதை அவரது மனைவி அஸ்வினி பெற்றுக் கொண்டார். இதனை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் வழங்கினர்.


பசவராஜ் பொம்மை - ரஜினிகாந்த்

இந்நிலையில், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "மாபெரும் நடிகர்களான ரஜினிகாந்த் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். அவர்கள் எங்கள் அழைப்பிற்கு பதிலளித்து புனித் ராஜ்குமாருக்கு 'கர்நாடகா ரத்னா' விருதை வழங்குவதற்காக கர்நாடகாவிற்கு வந்து கன்னடத்தில் பேசி கன்னடத்தின் மீதுள்ள அன்பை வெளிப்படுத்தினார்கள். அவர்களுக்கு என் நன்றி" என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.


Tags:    

Similar News