சினிமா செய்திகள்

உருவாகும் நெல்சன் யூனிவர்ஸ்- ரஜினியுடன் இணையும் நயன்தாரா?

Published On 2024-01-22 05:16 GMT   |   Update On 2024-01-22 05:16 GMT
  • ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’.
  • இந்த படத்தை நெல்சன் இயக்கியிருந்தார்.

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவான திரைப்படம் 'ஜெயிலர்'. இப்படம் கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று ரூ. 500 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.


'ஜெயிலர்' திரைப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பாளர் கலாநிதி மாறன் ரஜினி, நெல்சன், அனிருத் ஆகியோருக்கு விலையுயர்ந்த கார்கள் மற்றும் காசோலைகளை வழங்கினார்.


அதுமட்டுமல்லாமல், 'ஜெயிலர்' படத்தில் பணியாற்றியவர்களுக்கு தங்க நாணயத்தை பரிசாக வழங்கினார். சமீபத்தில் இயக்குனர் நெல்சன் 'ஜெயிலர்' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளதாக செய்தி பரவி வந்தது. இந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.


இந்நிலையில், 'ஜெயிலர்' படத்தின் இரண்டாம் பாகம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த பாகத்தில் சிலை கடத்தல்காரர்களிடம் ரஜினி மோதும் காட்சிகளும் அவர்களை அழிக்கும் காட்சிகளும் படமாக்கப்படவுள்ளதாகவும் இதற்கான திரைக்கதை அமைக்கும் பணியில் நெல்சன் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் 'கோலமாவு கோகிலா' திரைப்படத்தின் சில நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் நயன்தாரா இணைய வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News