சினிமா செய்திகள்

ராஷ்மிகா மந்தனா

என்னை இழிவுபடுத்தி கேவலமாக பேசுகிறார்கள்.. நடிகை ராஷ்மிகா கோபம்

Published On 2022-12-11 13:30 IST   |   Update On 2022-12-11 13:30:00 IST
  • கன்னட படங்களில் நடிக்க ராஷ்மிகாவுக்கு தடை விதிக்கப்பட உள்ளதாக சில தினங்களுக்கு முன்பு தகவல் பரவியது.
  • இது குறித்து ராஷ்மிகா விளக்கம் அளித்துள்ளார்.

தமிழில் கார்த்தியின் 'சுல்தான்' படத்தில் நடித்து பிரபலமான ராஷ்மிகா மந்தனா, தற்போது விஜய் ஜோடியாக 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். கர்நாடகாவை சேர்ந்த ராஷ்மிகா கன்னட படங்களை அவமதிக்கும் வகையில் நடந்து கொள்வதாக கன்னட திரையுலகில் விமர்சனங்கள் கிளம்பின. கன்னடத்தில் தயாராகி பிறமொழிகளில் டப்பிங் செய்து வெளியிடப்பட்ட 'காந்தாரா' படம் வசூலை குவித்து பலரது பராட்டை பெற்ற நிலையில், அந்த படத்தை நான் பார்க்கவில்லை என்று ராஷ்மிகா பேசியது கன்னட ரசிகர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

 

ராஷ்மிகா மந்தனா

ராஷ்மிகாவை விமர்சித்து வலைத்தளங்களில் பதிவுகள் வெளியிட்டனர். கன்னட படங்களில் நடிக்க ராஷ்மிகாவுக்கு தடை விதிக்கப்பட உள்ளதாகவும் வதந்தி பரவியது. இதனால் கோபமான ராஷ்மிகா அளித்துள்ள பேட்டியில், ''காந்தாரா படத்தை நான் பார்த்து விட்டேன். 'காந்தாரா' படக்குழுவினருக்கு எனது வாழ்த்துகளையும் தெரிவித்து உள்ளேன். 'காந்தாரா' படம் வெளியானபோது நான் படப்பிடிப்பில் இருந்ததால் பார்க்க முடியவில்லை.

 

ராஷ்மிகா மந்தனா

 

என்னை இழிவுபடுத்தி கேவலமாக பலர் பேசுகிறார்கள். உண்மை அவர்களுக்கு தெரிவது இல்லை. எனது நடிப்பில் ஏதேனும் குறை இருந்தால் சொல்லுங்கள். திருத்திக்கொள்ள தயாராக இருக்கிறேன். ஆனால் சொந்த வாழ்க்கை பற்றி பேசுகிறார்கள். இவர்களின் பேச்சுகளை நான் பொருட்படுத்துவது இல்லை" என்று ஆவேசமாக கூறினார்.

Tags:    

Similar News