இந்தியன் -2
இந்தியன்- 2 படக்குழுவிற்கு பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு.. ஏன் தெரியுமா..?
- இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் -2.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதைத்தொடர்ந்து, இந்தியன் -2 படப்பிடிப்பு சென்னை விமானநிலையத்தில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பிற்காக சென்னை விமான நிலையம் ஆணையத்திடம் படக்குழு ரூ.1.24 கோடி கட்டணமாக செலுத்தி முன் அனுமதி பெற்றுள்ளது.
கடந்த மூன்று நாட்களாக படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், இன்று நான்காவது நாளாக 500-க்கும் மேற்பட்ட துணை நடிகர்களை கொண்டு விமான தாக்குதலில் இருந்து தப்பித்து செல்வது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இதனால் சென்னை விமான நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.