சினிமா செய்திகள்

மணிப்பூர் பாலியல் வன்கொடுமை மனித வரலாற்றில் பேரவலம்- ஜி.வி.பிரகாஷ் கண்டனம்

Published On 2023-07-21 03:30 GMT   |   Update On 2023-07-21 03:31 GMT
  • இரண்டு பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் செல்லும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
  • மணிப்பூரில் நிகழ்ந்த இந்த வன்கொடுமைக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மணிப்பூரில் வன்முறை இன்னும் கட்டுக்குள் வராத நிலையில், திடீரென இரண்டு பழங்குடியின பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி சாலையில் ஊர்வலமாக இழுத்துச் செல்லும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கடந்த மே மாதம் 14-ந்தேதி நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மே 3-ந்தேதி இம்பாலில் மிகப்பெரிய பேரணி நடைபெற்றது. இந்த பேரணியின்போது மோதல் உண்டாகி, பின்னர் வன்முறையாக வெடித்தது. வன்முறையின் தொடர்ச்சியாக இந்த பதற வைக்கும் சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த சம்பவத்திற்கு எதிராக அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இசையமைப்பாளார் ஜி.வி.பிரகாஷ் மணிப்பூர் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "மணிப்பூர் சகோதரிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை மனித வரலாற்றில் பேரவலம் மன்னிக்க முடியாத பெருங்குற்றம்… கொலை வாளினை எடடா மிகு கொடியோர் செயல் அறவே…" என்று ஆவேசத்துடன் பதிவிட்டுள்ளார்.





Tags:    

Similar News