சினிமா செய்திகள்

மிஷ்கின் 

ப்ளீஸ் அதை பண்ணாதீங்க.. வெளியே போயிருங்க.. மேடையில் கடுப்பான மிஷ்கின்

Update: 2022-08-14 08:02 GMT
  • விஜய் ஆண்டனி தற்போது நடித்து முடித்துள்ள படம் கொலை.
  • 'கொலை' படத்தின் செய்தியாளகர்கள் சந்திப்பில் இயக்குனர் மிஷ்கின் கலந்துக் கொண்டார்.

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி தற்போது கிரைம் திரில்லர் வகை படமொன்றில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு 'கொலை' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை 'விடியும் முன்' புகழ் இயக்குனர் பாலாஜி குமார் இயக்கியுள்ளார். 'கொலை' படத்தை இன்பினிட்டி & லோட்டஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.

 

கொலை 

இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ரித்திகா சிங் நடித்துள்ளார். மேலும் மீனாட்சி சவுத்ரி, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, அர்ஜுன் சிதம்பரம் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இயக்குனர் மிஷ்கின் பேசுகையில், "தயாரிப்பாளர் தனஞ்செயன் சில நாட்களுக்கு முன்பு அழைத்து ஒரு விழாவிற்கு நீங்கள் கெஸ்டாக வரவேண்டும் என்றார். படம் பெயர் என்ன என்று கேட்டதும் கொலை என்றார். அந்த விழாவிற்கு நான்தான் பொருத்தமான விருந்தினர் கண்டிப்பாக வருகிறேன் என்றேன்.

 

மிஷ்கின் 

இயக்குனர் பாலாஜியை ரொம்ப நாட்களாக எனக்குத் தெரியும். ஒரு சந்திப்பில் அவர் பேசுவதை கூர்ந்து கவனித்தபோது அவர் ஆழமாக பேசக்கூடியவர் என்பது தெரிந்தது. படத்தின் டிரைலர் பார்த்தேன் சிறப்பாக உள்ளது. இசையமைப்பாளராக இருந்து இன்றைக்கு இவ்வளவு பெரிய நடிகராக விஜய் ஆண்டனி வளர்ந்திருப்பது சினிமா மீது அவருக்கு இருக்கும் ஆர்வத்தை காட்டுகிறது. கொலை படம் மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துகள்" எனத் தெரிவித்தார்.

 

மிஷ்கின் 

இதற்கிடையே மிஷ்கின் பேசிக்கொண்டிருக்கையில், அவருக்கு பின்புறமிருந்த சிலர் பேசிக்கொண்டிருந்தனர். அப்பொழுது கடுப்பான மிஷ்கின் அவர்களை அமைதியாக இருக்கும்படி கேட்டுக்கொண்டதோடு, பேச வேண்டுமென்றால் வெளியே போய் பேசுங்கள் சார் ப்ளீஸ் என்று கோபமாக கூறினார். 


Full View


Tags:    

Similar News