சினிமா செய்திகள்

மு.க.ஸ்டாலின் - மோகன் ஜி

null

புகைப்பிடிப்பவர்களுக்கு பத்து மடங்கு அபராதம்.. முதல்வருக்கு பிரபல இயக்குனர் வேண்டுகோள்..

Published On 2022-10-27 13:56 IST   |   Update On 2022-10-27 13:58:00 IST
  • சாலை விபத்துகள் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது.
  • இதையடுத்து புதிய மோட்டார் வாகன சட்டம் சமீபத்தில் அமலுக்கு வந்தது.

நாடு முழுவதும் சாலை விபத்துகளின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. இதனால் பல உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. அதனை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்தியது. அதன்படி சாலைவிதிகளை மீறுவோருக்கு விதிக்கப்படும் அபராத தொகை 10 மடங்கு உயர்த்தப்பட்டது.

அதன்படி ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களிடம் ரூ.1000, ஓட்டுனர் உரிமம் இல்லாமல் சென்றவர்களிடம் ரூ.5,000, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்களுக்கு ரூ.15 ஆயிரம், இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டியவவர்களுக்கு ரூ.5 ஆயிரம், அதிவேகமாக கனரக வாகனங்கள் ஓட்டிய வர்களிடம் ரூ.4 ஆயிரம் என வசூலிக்கப்பட்டு வருகிறது.


மோகன் ஜி

இதனிடையே 'பழைய வண்ணாரப்பேட்டை', 'திரெளபதி', 'ருத்ரதாண்டவம்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் மோகன் ஜி வாகன சட்டம் குறித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "வாகன ஓட்டிகளுக்கு அபராத தொகையை உயர்த்தியது போல பொது இடங்களில் புகை பிடிப்பவர்களுக்கு அபராத தொகையையும், சிறுவர்களுக்கு கூலிப் மற்றும் குட்கா விற்பனை செய்யும் கடைகாரர்களுக்கும் அபராதத்தை 10 மடங்கு உயர்த்தி அறிவிக்க முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் சார் அவர்களை கேட்டு கொள்கிறேன்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Tags:    

Similar News