சினிமா செய்திகள்

நீங்கள் கலையை பாராட்ட தவறியதில்லை- உதயநிதியை புகழ்ந்த தனுஷ்

Published On 2024-01-13 09:56 GMT   |   Update On 2024-01-13 09:56 GMT
  • ’கேப்டன் மில்லர்’ திரைப்படம் நேற்று வெளியானது.
  • இப்படத்திற்கு பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கேப்டன் மில்லர்'. அருண் மாதேஸ்வரன் இயக்கி இருக்கும் இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் நேற்று ஆயிரம் திரையரங்குகளுக்கு மேல் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. மேலும் 'கேப்டன் மில்லர்' திரைப்படம் வெளியான முதல் நாளில் முதல் இடத்தை பிடித்துள்ளது. இப்படத்திற்கு பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.


இதையடுத்து 'கேப்டன் மில்லர்' படக்குழுவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில், "ஒடுக்கப்பட்ட மக்களின் கோயில் நுழைவு உரிமையை அடிப்படையாக வைத்து 'கேப்டன் மில்லர்' என்கிற அருமையானதொரு படைப்பை சரியான நேரத்தில் கொண்டு வந்திருக்கும் நடிப்பு அசுரன் தனுஷ், சிவராஜ்குமார், இயக்குனர் அருண் மாதேஸ்வரன், இசை அமைப்பாளர் சகோதரர் ஜி.வி.பிரகாஷ், சத்யஜோதி பிலிம்ஸ், பிரியங்கா மோகன் உள்ளிட்ட அனைவருக்கும் எனது பாராட்டுகள். மனித உரிமைப் போராட்டத்தின் மகத்துவத்தைச் விடுதலைப் போராட்டக் கதைக்களத்தின் ஊடாக அழுத்தமாக பேசியிருக்கிறார் கேப்டன் மில்லர்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு நடிகர் தனுஷ் நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "நன்றி உதயநிதி ஸ்டாலின். நீங்கள் விரும்பும் கலையை பாராட்ட தவறுவதில்லை. "கர்ணன்" படத்திற்காக நீங்கள் பாராட்டிய காலத்தை நான் இன்னும் அன்புடன் நினைவில் கொள்கிறேன். இந்த பாராட்டு எனக்கும் எனது கேப்டன் மில்லர் குழுவிற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும், அதற்காக உங்களுக்கு மிக்க நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.


Tags:    

Similar News