சினிமா செய்திகள்

தனுஷ்

null

தனுஷ் படத்தின் புதிய அப்டேட்

Update: 2022-07-02 12:31 GMT
  • இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள படம் கேப்டன் மில்லர்.
  • இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகி உள்ள 'திருச்சிற்றம்பலம்' படத்தில் தனுஷ் நடித்துள்ளார். இப்படத்தில் நித்யா மேன‌ன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இப்படம் ஆகஸ்ட் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.


தனுஷ் - அருண் மாதேஸ்வரன்

இதைத்தொடர்ந்து, அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கவுள்ள படம் கேப்டன் மில்லர். சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கவுள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கவுள்ளார்.

இந்நிலையில், இப்படம் குறித்த வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், வரலாற்று பாணியில் இப்படம் உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News