சினிமா செய்திகள்

குஷ்பு

முதுகெலும்பு தொடர்பான பிரச்சினை: சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நடிகை குஷ்பு

Update: 2022-10-06 09:36 GMT
  • தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு.
  • தற்போது முதுகெலும்பு பிரச்னைக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டு வீடு திரும்பியுள்ளதாக பதிவிட்டுள்ளார்.

90-களின் காலக்கட்டத்தில் தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. இவர் நடிப்பில் வெளியான தர்மத்தின் தலைவன், மைக்கேல் மதன காமராஜன், சின்னத்தம்பி, ரிக்‌ஷா மாமா, அண்ணாமலை, நாட்டாமை உள்ளிட்ட பல படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். தற்போது குஷ்பு அரசியலில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறார்.

குஷ்பு

 

இந்நிலையில் நடிகை குஷ்பு முதுகெலும்பு தொடர்பான பிரச்னைக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டு, வீடு திரும்பி இருப்பதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது பதிவில், 2 நாட்கள் ஓய்வு எடுத்துவிட்டு மீண்டும் வேலைக்கு திரும்பி விடுவேன் என குஷ்பு குறிப்பிட்டுள்ளார். மேலும் அனைவருக்கும் விஜயதசமி வாழ்த்துகளையும் அவர் தெரிவித்துள்ளர். குஷ்பு விரைவில் குணமடைய வேண்டும் என அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News