சினிமா செய்திகள்

முற்பகல் கட் செய்யின் பிற்பகல் ரெய்டு விளையும்.. செந்தில் பாலாஜி கைதிற்கு கஸ்தூரி கிண்டல் பதிவு

Published On 2023-06-14 06:03 GMT   |   Update On 2023-06-14 06:03 GMT
  • அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது.
  • அதனைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் நேற்று காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். மத்திய துணை ராணுவப்படை வீரர்கள் பாதுகாப்புடன் 5 கார்களில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அடையாறு பசுமை வழிச் சாலையில் உள்ள செந்தில் பாலாஜியின் வீடு, பிஷப் கார்டன் பகுதியில் உள்ள அவரது சகோதரர் தங்கியிருந்த வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர்.


செந்தில் பாலாஜி

அதனைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இதற்கிடையே அவர் உடல்நலக் குறைவு காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மயக்க நிலையில் இருக்கும் அவருக்கு ஐசியூ-வில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கே.என். நேரு, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட அமைச்சர்கள் மருந்துவனைக்கு சென்று செந்தில் பாலாஜி உடல்நலம் குறித்து கேட்டறிந்து வருகிறார்கள்.

செந்தில் பாலாஜி கைதை தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அமைச்சர்கள், அதிகாரிகள், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது திமுக சார்பில் நீதிமன்றத்தை நாடலாம் என முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


செந்தில் பாலாஜி -மு.க.ஸ்டாலின்

இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி கைது குறித்து நடிகை கஸ்தூரி சர்ச்சையாக பதிவிட்டுள்ளார். அதில், "முற்பகல் கட் செய்யின் பிற்பகல் ரெய்டு விளையும். CurrentCut வரும் முன்னே, raid வரும் பின்னே. ரெய்டு வரும் முன்னே, நெஞ்சுவலி வரும் உடனே.

கஸ்தூரியின் latest பழமொழிகள் இடுக்கண் வருங்கால் நகுக. இன்கம்டாக்ஸ் ரெய்டு வருங்கால் அழுக. பிரிக்க முடியாதது அரசியல்வாதியும் நெஞ்சுவலியும். பிரிய கூடாதது பாட்டிலும் பத்து ரூபாயும்" என்று பதிவிட்டுள்ளார்.


கஸ்தூரி பதிவு

மேலும் மற்றொரு பதிவில், "செந்தில் பாலாஜி எவ்வளவு துடிக்கிறார். ரெய்டு போகும்போது ED IT அதிகாரிகளோடு டாக்டரும் அவசியம். இந்திய அரசியல்வாதிகளுக்கு மிகவும் பலவீனமான இதயம் உள்ளது. சிறைச்சாலைகளில் இதயத்திற்கு என சிறப்பு சிகிச்சை அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். காவலர்கள் CPU இல் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். போலீஸ் ஜீப்பிற்கு பதிலாக, ஆம்புலன்ஸ் பயன்படுத்துவது நல்லது" என்று குறிப்பிட்டுள்ளார்.



Tags:    

Similar News