சினிமா செய்திகள்

நானி

வைரலாகும் நானியின் தசரா பட பாடல்

Update: 2022-10-04 08:15 GMT
  • இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடித்துள்ள படம் தசரா.
  • பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் நானி, அந்தே சுந்தராணிகி படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது தசரா படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்க கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.

 

தசரா

மேலும் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் சுதாகர் செருக்குரி தயாரித்துள்ள இப்படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாரயணன் இசையமைத்துள்ளார்.

 

தசரா

அண்மையில் நடிகை சில்க் சுமிதா புகைப்படத்திற்கு முன்பு கையில் பாட்டிலுடன் நானி அமர்ந்திருக்கும் இப்படத்தின் போஸ்டர் வெளியாகி வைரலானது. இப்படத்தின் முதல் பாடல் 'தூம் தாம் தோஸ்தான்' தசரா அன்று வெளியாகும் என படக்குழு வித்தியாசமான முறையில் வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தது.

 

தசரா - தூம் தாம் தோஸ்தான்

இந்நிலையில் 'தூம் தாம் தோஸ்தான்' பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தசரா திரைப்படம் அடுத்த ஆண்டு மார்ச் 30-ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Full View
Tags:    

Similar News