சினிமா செய்திகள்
null

உனக்கு 20... எனக்கு 45... 'சூர்யா 46' படத்தின் கதை இதுதான்! - தயாரிப்பாளர் நாக வம்சி

Published On 2025-12-27 13:16 IST   |   Update On 2025-12-27 13:17:00 IST
  • இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து அடுத்தக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
  • இத்திரைப்படம் அடுத்தாண்டு கோடை விடுமுறைக்கு வெளியாக இருக்கிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா. இவர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடித்துள்ள 45-வது படமான 'கருப்பு' படத்தின் பணிகள் நிறைவடைந்து வெளியிட தயாராக உள்ளது. இதனால் இப்படத்தின் வெளியீட்டு தேதி குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் சூர்யா தனது 46-வது படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக மமிதா பைஜு நடித்துள்ளார். ராதிகா சரத்குமார் மற்றும் ரவீனா தாண்டன் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதற்கிடையே இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து அடுத்தக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இத்திரைப்படம் அடுத்தாண்டு கோடை விடுமுறைக்கு வெளியாக இருக்கிறது.

 

இந்த நிலையில், 'சூர்யா 46' படத்தின் கதை குறித்து தயாரிப்பாளர் நாக வம்சி கூறியுள்ளது தற்போது இணையத்தில் வைரலாகிறது. அதாவது 'சூர்யா 46' படத்தின் கதை 45 வயது இளைஞனுக்கும் 20 வயது பெண்ணுக்கும் இடையிலான உறவைப் பற்றியது. இந்தப் படம் பலவிதமான உணர்ச்சிகளை கொண்டு இருக்கும். மேலும் கஜினியில் வரும் சஞ்சய் ராமசாமி கதாபாத்திரத்தின் பாணியில் இருக்கும் என்று தயாரிப்பாளர் நாக வம்சி கூறியுள்ளார். 



Tags:    

Similar News