மோகணேஷ்
சர்வதேச விருதுகளை வென்ற '21 கிராம்ஸ் பிலாசபி' நாயகன்
- இயக்குனர் யான் சசி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “21 கிராம்ஸ் பிலாசபி”.
- இந்த படத்தின் நாயகன் மோகணேஷ் சிறந்த நடிகருக்காக 7 விருதுகளை வென்றுள்ளார்.
இயக்குனர் யான் சசி இயக்கத்தில் அறிமுக நடிகர் மோகணேஷ், பூ ராமு, ஜோசப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் "21 கிராம்ஸ் பிலாசபி". இந்த உலகில் எல்லாவற்றையும் விட ஒரு உயிரின் மதிப்பே உயர்ந்தது மிக முக்கியமானது. ஒருவரின் உயிரை எடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை என்ற கருத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தை அவுராஸ் பிக்சர்ஸ் மற்றும் கல்ட் ஸ்குவாட் ஃபிலிம் இணைந்து தயாரித்துள்ளது.
21 கிராம்ஸ் பிலாசபி
சவுந்தர்ராஜன், அன்பு டென்னிஸ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு விஜய் சித்தார்த் இசையமைத்துள்ளார். 52 நிமிடங்கள் ஓடும் இந்தப்படம் கொல்கத்தா சர்வதேச கல்ட் திரைப்படவிழா, தாகூர் சர்வதேச திரைப்படவிழா, சிங்கப்பூர் சர்வதேச திரைப்படவிழா, ரோம், டோக்கியோ, அமெரிக்கன் கோல்டன் பிக்சர்ஸ் திரைப்படவிழா என உலகம் முழுவதும் இதுவரை 24 விருதுகளை இப்படம் வென்றுள்ளது.
மோகணேஷ்
மேலும், அறிமுக நடிகர் மோகணேஷ் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பல சர்வதேச திரைவிழாக்களில் சிறந்த நடிகருக்கான 7 விருதுகளை வென்றுள்ளார். "21 கிராம்ஸ் பிலாசபி" திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.