சினிமா செய்திகள்
null

Songs of forgotten trees: வெனிஸ் திரைப்பட விழாவில் விருது வென்று வரலாறு படைத்த இளம் இந்திய இயக்குனர்!

Published On 2025-09-08 02:45 IST   |   Update On 2025-09-08 03:05:00 IST
  • Orizzonti நடுவர் மன்றத்தின் தலைவரான பிரெஞ்சு இயக்குனர் ஜூலியா டுகோர்னாவ் இந்த விருதை அனுபர்ணாவுக்கு வழங்கினார்.
  • இந்தப் படத்தை பிரபல இயக்குனர் அனுராக் காஷ்யப் தயாரித்துள்ளார்.

82வது வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனர் விருதை இளம் இந்திய இயக்குனர் அனுபர்ணா ராய் வென்று வரலாறு படைத்துள்ளார்.

அவரது 'சாங்ஸ் ஆஃப் ஃபார்காட்டன் ட்ரீஸ்' திரைப்படம் இந்த விருதை வென்றது. வெனிஸ் திரைப்பட விழாவின் Orizzonti பிரிவு போட்டியில் அனுபர்ணா சிறந்த இயக்குனர் விருதை வென்றார்.

Orizzonti நடுவர் மன்றத்தின் தலைவரான பிரெஞ்சு இயக்குனர் ஜூலியா டுகோர்னாவ் இந்த விருதை அனுபர்ணாவுக்கு வழங்கினார்.

'சாங்ஸ் ஆஃப் ஃபார்காட்டன் ட்ரீஸ்' என்பது மும்பையில் புலம்பெயர்ந்த இரண்டு பெண்களின் வாழ்க்கையை சித்தரிக்கிறது.

வாழ்வாதாரம், தனிமை மற்றும் உறவுகள் ஆகிய கருப்பொருள்களைக் கொண்டு அனுபர்ணா இந்தப் படத்தைத் எடுத்துள்ளார். இந்தப் படத்தை பிரபல இயக்குனர் அனுராக் காஷ்யப் தயாரித்துள்ளார்.

Orizzonti பிரிவில் இந்தியாவிலிருந்து பங்கேற்ற ஒரே படம் இதுவாகும். மேலும் அவ்விருதை வெல்லும் முதல் இந்திய படமாகவும் இது அமைந்துள்ளது. 

Tags:    

Similar News