சினிமா செய்திகள்

தருமபுரி அருகே விபத்தில் சிக்கிய கேரள நடிகர்- தந்தை பலி

Published On 2025-06-06 10:06 IST   |   Update On 2025-06-06 10:06:00 IST
  • நடிகர் சாக்கோ, தாய் உள்ளிட்ட 4 பேர் படுகாயமடைந்தனர்.
  • காரை சாக்கோவின் மேலாளர் ஓட்டிச்சென்றதாக கூறப்படுகிறது.

பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ. இவர் தமிழில் 'பீஸ்ட், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இவர் மீது நடிகை ஒருவர் தன்னிடம் தவறாக நடந்துக்கொண்டதாக புகார் அளித்து இருந்தார். இதனை தொடர்ந்து, கொச்சியில் உள்ள ஓட்டலில் போதைப்பொருள் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை தேடி போலீசார் இரவில் அதிரடியாக சென்று சோதனை நடத்தினர். அப்போது ஷைன் டாம் சாக்கோ தங்கியிருந்த ஓட்டலில் இருந்து தப்பி ஓடியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே நிகழ்ந்த கார் விபத்தில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவின் தந்தை உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவில் இருந்து பெங்களூருவுக்கு மருத்துவ பரிசோதனைக்காக காரில் சென்றபோது லாரி மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் நடிகர் சாக்கோவின் தந்தை சி.பி.சாக்கோ பலியானார். நடிகர் சாக்கோ, தாய் உள்ளிட்ட 4 பேர் படுகாயமடைந்தனர்.

காரை சாக்கோவின் மேலாளர் ஓட்டிச்சென்றதாக கூறப்படுகிறது. விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News