சினிமா செய்திகள்

விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா ஜோடிக்கு விரைவில் டும் டும் டும்... தேதி குறிச்சாச்சு...

Published On 2025-11-07 09:16 IST   |   Update On 2025-11-07 09:16:00 IST
  • தெலுங்கில் நடிகர் ஜெகபதி பாபு நடத்தும் நிகழ்ச்சியில் ராஷ்மிகா கலந்துகொண்டார்.
  • ராஷ்மிகா, ‘இது என் வாழ்நாளில் முக்கியமான ஒன்று' என்று கண்ணடித்து சிரித்தார்.

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான ராஷ்மிகாவுக்கும், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டாவுக்கும் ஐதராபாத்தில் கடந்த மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. ஆனால் காதலை போலவே, இருவரும் இந்த விவகாரம் குறித்து வாயைத் திறக்காமல் ரகசியமாகவே வைத்திருந்தனர்.

ஆனாலும் ராஷ்மிகா விரலில் இருக்கும் நிச்சயதார்த்த மோதிரம் அதை சொல்லாமல் சொல்லி வருகிறது. அந்த மோதிரமும் தற்போது வைரலாகி வருகிறது.

இதனிடையே, தெலுங்கில் நடிகர் ஜெகபதி பாபு நடத்தும் நிகழ்ச்சியில் ராஷ்மிகா கலந்துகொண்டார். அப்போது அவரது விரலில் அணிந்திருக்கும் மோதிரம் பற்றி பேச்சு எழுந்தது. இதற்கு ராஷ்மிகா, 'இது என் வாழ்நாளில் முக்கியமான ஒன்று' என்று கண்ணடித்து சிரித்தார்.

இந்த நிலையில், விஜய் தேவர்கொண்டா- ராஷ்மிகா ஜோடி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ந்தேதி திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. மேலும் இவர்களின் திருமணம் ராஜஸ்தானின் உதய்பூரில் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ரசிகர்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

Tags:    

Similar News