சினிமா செய்திகள்

என் வலிகளுக்கு மருந்தாக வந்தவர் - விஜய் தேவரகொண்டா குறித்து மனம் திறந்த ராஷ்மிகா மந்தனா

Published On 2025-11-23 07:28 IST   |   Update On 2025-11-23 07:28:00 IST
  • தன்னுடைய மகிழ்ச்சிக்கான காரணம் பற்றி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
  • விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகா மந்தனாவும் ‘கீதாகோவிந்தம்', ‘டியர் காம்ரேட்' ஆகிய படங்களில் இணைந்து நடித்தனர்.

தென்னிந்திய மொழி திரைப்படங்கள் மட்டுமின்றி, பாலிவுட் ரசிகர்கள் மனதிலும் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டவர், ராஷ்மிகா மந்தனா. இவரது நடிப்பில் வெளியான பல படங்கள் பல கோடி வசூல் சாதனையை நிகழ்த்தி இருக்கின்றன. சமீபத்தில் பாலிவுட்டில் ராஷ்மிகா மந்தனா கதையின் நாயகியாக நடித்த 'தி கேர்ள் பிரண்ட்' படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

எப்போதும் சிரித்த முகத்துடன் காணப்படும் ராஷ்மிகா மந்தனா, தன்னுடைய மகிழ்ச்சிக்கான காரணம் பற்றி வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அதில், ''என் மனதில் இருந்த வலியும், வேதனையும் இப்போது மறைந்துவிட்டன. எனக்குள் இப்போது மகிழ்ச்சியான தருணங்கள் மட்டுமே இருக்கின்றன. அதற்கெல்லாம் காரணம், விஜய் தேவரகொண்டா தான். என்னுடைய எல்லா வலிகளுக்கும் அவர்தான் மருந்தாக இருந்திருக்கிறார்" என்று கூறியுள்ளார்.

விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகா மந்தனாவும் 'கீதாகோவிந்தம்', 'டியர் காம்ரேட்' ஆகிய படங்களில் இணைந்து நடித்தனர். அப்போதில் இருந்தே இருவரும் காதலித்து வருவதாக பேசப்பட்டது. மேலும் இவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு வரும் பிப்ரவரி 26-ந்தேதி ஜெய்ப்பூர் அரண்மனையில் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News