சினிமா செய்திகள்

ராஜமௌலி இயக்கும் SSMB29 படத்தில் இணைந்த பிரபல இந்தி நடிகை

Published On 2024-12-28 16:21 IST   |   Update On 2024-12-28 16:21:00 IST
  • இப்படம் இரண்டு பாகங்களாக உருவாக உள்ளது.
  • இப்படத்திற்கு தற்காலிகமாக SSMB29 என தலைப்பிட்டுள்ளனர்.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களுல் இருப்பவர் மகேஷ் பாபு. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான குண்டூர் காரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக அமைந்தது.

அடுத்ததாக மகேஷ் பாபு இந்திய சினிமாவின் பெருமை மிக்க இயக்குனரான ராஜமௌலி இயக்கத்தில் திரைப்படம் நடிக்கவுள்ளார். இந்த படத்தை அதிக பட்ஜெட்டில் ஹாலிவுட் தரத்துடன் எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. அனைத்து மொழிகளில் இருந்தும் முன்னணி நடிகர் நடிகைகள் இதில் நடிக்க உள்ளனர். இப்படம் இரண்டு பாகங்களாக உருவாக உள்ளது. இப்படத்திற்கு தற்காலிகமாக SSMB29 என தலைப்பிட்டுள்ளனர்.

உலகத்தை சுற்றும் ஒரு சாகச பயணத்தை பின்னணியாக கொண்டு தயாராகும் படம் இது என்றும் பெரும் பகுதி படப்பிடிப்பு அமேசான் காடுகளில் நடத்தப்படும் என்றும் ராஜமவுலி ஏற்கனவே அறிவித்துள்ளார். இந்நிலையில் படத்தின் நாயகியாக பிரியங்கா சோப்ராவும் வில்லன் கதாப்பாத்திரத்திற்கு மலையாள அநடிகர் பிரித்விராஜ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

திரைப்படத்தின் இசையை எம்.எம் கீரவானி மேற்கொள்கிறார். ஒளிப்பதிவை பிஎஸ் வினோத் மேற்கொள்ளவுள்ளார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் வரும் ஜனவரி மாதத்தில் இருந்து தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News