சினிமா செய்திகள்

படத்தின் வெற்றியை விட மக்களும் அனுபவமும் தான் முக்கியம் - மனம் திறந்த தீபிகா படுகோன்

Published On 2025-09-20 16:22 IST   |   Update On 2025-09-20 16:22:00 IST
கல்கி இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு பணிகள் அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

கல்கி 2898 ஏடி' திரைப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடிப்பில் கடந்த ஆண்டு ஜூன் 27 ஆம் தேதி வெளியானது. பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார்.

வெளியான முதல் நாளிலேயே ரூ.180 கோடி வசூலுடன் ஆட்டத்தைத் தொடங்கிய 'கல்கி 2898 ஏடி' திரைப்படம் வசூலில் சக்கை போடு போட்டது.

கல்கி திரைப்படம் இதுவரை உலகமெங்கும் 1100 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் இரண்டாம் பாகத்தை நோக்கி மக்கள் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.

இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு பணிகள் அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பாகம் கமல்ஹாசனின் யாஸ்கின் கதாப்பாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் படக்குழு கல்கி இரண்டாம் பாகத்திலிருந்து நடிகை தீபிகா படுகோனை நீக்கினர். இது பெரும் பேசும் பொருளாக மாறியது. ஆனால் இதற்கான காரணத்தை படக்குழு வெளியிடவில்லை.

இன்று தீபிகா, ஷாருக்கான் நடிக்கும் கிங் படப்பிடிப்பில் கலந்துக் கொண்டார்.

தீபிகா இன்று அவரது சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில் 18 ஆண்டுகளுக்கு முன் 'ஒம் ஷாந்தி ஓம்' படப்பிடிப்பின் போது கற்றுக் கொண்ட முக்கியமான பாடத்தை பகிர்ந்துள்ளார்.

" ஷாருக்கான் உடன் நடித்த முதல் படமான ஓம் ஷாந்தி ஓம் படத்தின் நேரத்தில் எனக்கு அவர் கற்றுக் கொடுத்த முதல் பாடம், ஒரு படத்தை எடுக்கும் அனுபவமும், அதில் பணிபுரியும் மக்களும், அதன் வெற்றியை விட அதிகம் முக்கியம் என்பதே. அதன் பின்னர் எடுத்த ஒவ்வொரு முடிவிலும் நான் அந்தக் கற்றலைப் பின்பற்றி வருகிறேன்," என தீபிகா கூறினார்.

இந்த பதில் சமீபத்தில் அவர் நடிக்க இருந்த கல்கி திரைப்படத்தில் இருந்து விலகியதன் காரணமாக ரசிகர்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

Tags:    

Similar News