சினிமா செய்திகள்

கொலை வழக்கில் பிரபல பாலிவுட் நடிகையின் தங்கை அமெரிக்காவில் கைது

Published On 2024-12-03 10:19 IST   |   Update On 2024-12-03 10:19:00 IST
  • நடிகை நர்கிஸ் ஃபக்ரியின் தங்கை அலியா ஃபக்ரி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
  • அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த நர்கிஸ் ஃபக்ரி தற்போது பாலிவுட் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை நர்கிஸ் ஃபக்ரியின் தங்கை அலியா ஃபக்ரி மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள தனது முன்னாள் காதலனின் வீட்டில் வேண்டுமென்றே தீ வைத்து அவரது முன்னாள் காதலன் எட்வர்ட் ஜேக்கப்ஸ் (35) மற்றும் அவரது தோழி அனஸ்டாசியா எட்டியென் (33) ஆகியோரைக் கொன்றதாக அலியா ஃபக்ரி மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

எட்வர்ட் ஜேக்கப்ஸ் உடன் மீண்டும் சேருவதற்கு அலியா ஃபக்ரி முயற்சி செய்துள்ளார் என்றும் ஆனால் அதற்கு அவரது காதலர் ஒத்துக்கொள்ளவில்லை என்ற ஆத்திரத்தில் அவரது வீட்டிற்கு தீ வைத்துள்ளார் என்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

தற்போது அலியா ஃபக்ரி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது. அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News