சினிமா செய்திகள்
null

நாக் அஷ்வின் - ரஜினிகாந்த் கூட்டணி விரைவில்?

Published On 2025-08-25 11:25 IST   |   Update On 2025-08-25 11:26:00 IST
  • நாக் அஷ்வின் ஆலியா பட்டுக்காக பெண்களை மையப்படுத்திய படம் ஒன்றை வடிவமைத்துள்ளார்.
  • நாக் அஷ்வின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து ஒரு கதையை கூறியுள்ளார்.

கல்கி 2898 AD படத்தை இயக்கிய நாக் அஷ்வின், அதற்கான அடுத்த பாகத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகளை முடித்துவிட்டார். ஆனால், ஹீரோ பிரபாஸ் பல படங்களில் பிஸியாக இருப்பதால், படப்பிடிப்பு பணிகள் தாமதமாகியுள்ளது. இந்த இடைவெளியில், நாக் அஷ்வின் ஆலியா பட்டுக்காக பெண்களை மையப்படுத்திய படம் ஒன்றை வடிவமைத்துள்ளார்.

இதற்கிடையில், வையஜயந்தி மூவிஸ் நிறுவனரான சி. அஷ்வினி தத்தின் ஏற்பாட்டில், நாக் அஷ்வின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து ஒரு கதையை கூறியுள்ளார்.

ரஜினி அந்தக் கதையை ரசித்து, முழு ஸ்கிரிப்டை தயார் செய்து கொண்டு வரும்படி நாக் அஷ்வினிடம் கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எல்லாம் சரியாக நடந்தால், வையஜயந்தி மூவிஸ் நிறுவனம் இந்த பிரமாண்டக் கூட்டணியை உருவாக்க இருக்கிறது.

ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான கூலி திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ரஜினிகாந்த், தெலுங்கு இயக்குநர்களுடன் வேலை செய்ய ஆர்வமாக உள்ளார். ஏற்கனவே பிம்பிசாரா இயக்குனர் வாஸிஷ்டா மற்றும் விவேக் அத்ரேயா இருவரும் கதை கூறியிருந்தாலும், அவை நடக்காமல் போனது.

இப்போது நாக் அஷ்வின் ரஜினியை கவர்வாரா? அவரது கதை ஓகே ஆகுமா? என்பதே ரசிகர்களின் கேள்வி.

Tags:    

Similar News