சினிமா செய்திகள்
null

இதயம் கனக்கிறது விஜய் அண்ணா.. ஜன நாயகன் வெளியீடு ஒத்திவைப்பு குறித்து ரவி மோகன் வேதனை

Published On 2026-01-08 11:53 IST   |   Update On 2026-01-08 13:40:00 IST
  • அதை நீக்கிய பின்னரே சான்றிதழ் அளிப்போம் எனவும் சென்சார் வாரியம் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
  • அந்தத் தேதி எதுவாக இருந்தாலும் சரி.. அன்றைக்குத்தான் எங்களுக்குப் பொங்கல் ஆரம்பம்.

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த படம் ஜன நாயகன். பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். கேவிஎன் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருந்தது.

தவெக மூலம் அரசியல் பிரவேசம் செய்துள்ள விஜய் இது தனது கடைசி படம் என்று தெரிவித்துள்ளார்.

இப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்தது. ஆனால், இதுவரை படத்திற்கு தணிக்கை சான்றிதல் வழங்கப்படவில்லை.

எனவே தயாரிப்பு நிறுவனம் உயர்நீதிமன்றத்தை அணுகியது. படத்தில் மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கில் காட்சிகள் உள்ளதாவும், அதை நீக்கிய பின்னரே சான்றிதழ் அளிப்போம் எனவும் சென்சார் வாரியம் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இதனால் இதுவரை சான்றிதழ் கிடைக்காததால் நாளை படத்தை ரிலீஸ் செய்வது முடியாத காரியம்ம் என்பதால் படத்தின் ரிலீசை ஒத்தி வைப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இதனால் விஜய் ரசிகர்கள் ஒரு புறம் சோகத்தின் இருக்க மறுபுறம் விஜய்யின் படத்தை சென்சார் வாரியம் மூலம் மத்திய அரசு குறிவைத்து அரசியல் அழுத்தம் தருவதாக பலர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

அமலாக்கத்துறை, சிபிஐ போல சென்சார் வாரியாதையும் மிரட்டல் கருவியாக மோடி அரசு மாற்றி உள்ளதாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் ரவிமோகம், ஜனநாயகன் ரிலீஸ் ஒத்திவைப்பு குறித்து வருத்தம் தெரிவித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், "இதயம் கனக்கிறது விஜய் அண்ணா.. உங்களது கோடிக்கணக்கான தம்பிகளில் ஒருவனாக, ஒரு சகோதரனாக நான் உங்கள் பக்கம் நிற்கிறேன்.

உங்களுக்கு என்று ஒரு வெளியீட்டுத் தேதி தேவையில்லை.. நீங்கள் திரையில் தோன்றுவதுதான் உண்மையான 'ஓப்பனிங்'. அந்தத் தேதி எதுவாக இருந்தாலும் சரி.. அன்றைக்குத்தான் எங்களுக்குப் பொங்கல் ஆரம்பம்!" என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் ரவி மோகன் ஜனவரி 10 அன்று வெளியாக உள்ள சிவகார்திகேயனின் பராசக்தி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அதுவும் முதல் முறையாக நெகட்டிவ் ரோலில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.   

Tags:    

Similar News