சினிமா செய்திகள்

துடரும் வெற்றியை தொடர்ந்து மோகன்லாலின் `ஹிருதயபூர்வம்' படப்பிடிப்பு நிறைவு

Published On 2025-05-20 15:47 IST   |   Update On 2025-05-20 15:47:00 IST
  • மோகன்லால் நடிப்பில் அண்மையில் வெளியான துடரும் திரைப்படம் ப்ளாக்பஸ்டர் ஹிட்டடித்தது.
  • ஹிருதயபூர்வம் படத்தை சத்யன் அந்திகட் இயக்கியுள்ளார்.

மோகன்லால் நடிப்பில் அண்மையில் வெளியான துடரும் திரைப்படம் ப்ளாக்பஸ்டர் ஹிட்டடித்தது. இதுவரை கேரளா சினிமாவில் அதிகம் வசூலிக்கப்பட்ட திரைப்படமாக துடரும் இடம்பெற்றுள்ளது.

இப்படத்தை தொடர்ந்து மோகன்லால்` 'ஹிருதயபூர்வம் '' திரைப்படத்தில் நடித்து வந்தார். இந்நிலையில் படப்பிடிப்பு பணிகள் இன்று நிறைவடைந்துள்ளது. இப்படத்தை சத்யன் அந்திகட் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் மாளவிகா மோகனன், சங்கீதா மாதவன் நாயர், சங்கீத் பிரதாப், சித்திக், சபிதா ஆனந்த், பாபுராஜ், நிஷன் ,லாலு அலெக்ஸ், ஜனார்தனன் மற்றும் எஸ்.பி சரண் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி வெளியாகிறது.

இதற்கு முன் இயக்குநர் அந்திகட் உடன் 2015 ஆம் ஆண்டு வெளியான `என்னும் எப்பொழும்' திரைப்படத்தில் மோகன்லால் நடித்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News