null
சீரியல் நடிகைக்கு ஆபாச வீடியோக்கள் அனுப்பி சில்மிஷம் செய்த நபர் அதிரடி கைது
- வெவ்வேறு ஐடிகளை உருவாக்கி தொடர்ந்து ஆபாசமான செய்திகள் மற்றும் வீடியோக்களை அனுப்பியுள்ளார்.
- ஆனால் அங்கும் அவர் அநாகரிகமாக நடந்துகொண்டார்.
கர்நாடக மாநிலம் வெங்களூருவில் வசிக்கும் 41 வயதான ரஜினி என்ற கன்னட-தெலுங்கு தொலைக்காட்சி சீரியல் நடிகை, பேஸ்புக்கில் ஒருவர் ஆபாச வீடியோக்கள் மற்றும் செய்திகளை அனுப்பி தன்னை துன்புறுத்தியதாக போலீசில் புகார் அளித்துள்ளார்.
குற்றம் சாட்டப்பட்ட நவீன் ஆரம்பத்தில் ஒரு ஐடியிலிருந்து நடிகைக்கு நண்பர் கோரிக்கையை அனுப்பிய நிலையில் நடிகை அதை நிராகரித்தார்.
அந்த நபரை நடிகை ‛பிளாக்' செய்தாலும் வெவ்வேறு ஐடிகளை உருவாக்கி தொடர்ந்து ஆபாசமான செய்திகள் மற்றும் வீடியோக்களை அனுப்பியுள்ளார்.
மூன்று மாதங்களாக தொடர்ந்த துன்புறுத்தல் தாங்க முடியாமல், நடிகை நவம்பர் 1ஆம் தேதி நாகரபாவி பகுதியில் உள்ள ஒரு உணவகத்திற்குச் சந்திப்பதாகக் கூறி அவரை வரவழைத்து நேரடியாகக் கண்டித்தார்.
ஆனால் அங்கும் அவர் அநாகரிகமாக நடந்துகொண்டதைத் தொடர்ந்து, நடிகை உடனடியாக போலீஸாரை அழைத்துள்ளார். நடிகையின் புகாரை அடுத்து போலீசார் நவீனை கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர்.