சினிமா செய்திகள்
null

15 ஆண்டுகள் சினிமாவில் இருந்தும் இந்த படத்தில் நடித்ததற்கு தான் மம்மூட்டி பாராட்டினார் - அஜு வர்கீஸ்

Published On 2025-07-31 11:00 IST   |   Update On 2025-07-31 11:21:00 IST
  • இயக்குனர் ராம் அடுத்ததாக 'பறந்து போ' என்ற திரைப்படத்தை இயக்கினார்.
  • திரைப்படம் வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் ராம். இவர் அடுத்ததாக 'பறந்து போ' என்ற திரைப்படத்தை இயக்கினார். திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. நீண்ட நாட்களுக்கு பிறகு ராம் இயக்கிய திரைப்படத்தை மக்கள் கொண்டாடி தீர்த்தனர்.

இதில், மிர்ச்சி சிவா, அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தனர்.

இந்நிலையில் மலையாள நடிகர் அஜு வர்கீஸ், இயக்குனர் ராம் இயக்கிய 'பறந்து போ' திரைப்படத்தில் நடித்ததற்காக மெகா ஸ்டார் மம்முட்டியிடமிருந்து கிடைத்த பாராட்டை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

"மம்முட்டி சார் எனக்கு அழைத்து 'Good work' என்று சொன்னார். 15 ஆண்டுகள் சினிமாவில் இருந்தும், இதுவரை அவர் எனது நடிப்பை பாராட்டியதில்லை. அதுவும் நான் சிறிய கதாபாத்திரமாக நடித்த ஒரு தமிழ் படத்துக்கு இப்படிப் பெரிய நடிகர் பாராட்டுவது, எனக்கு மிகப் பெரிய பரிசு போல இருந்தது. உடனே ராம் சாருக்கு அழைத்து இதைச் சொன்னேன்." என கூறினார்.

ராமின் இயக்கத்தில் மம்மூட்டி பேரன்பு திரைப்படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News