சினிமா செய்திகள்
null

படமாகும் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு- வெளியான சுவாரசிய அப்டேட்

Published On 2025-07-25 10:56 IST   |   Update On 2025-07-25 13:34:00 IST
  • பா.ம.க. நிறுவனர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது.
  • லைகா நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று தனது 87-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பா.ம.க. நிறுவனர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. சேரன் இயக்கத்தில் உருவாகும் 'அய்யா' படத்தின் தலைப்பை வெளியிட்டு ராமதாஸிற்கு படக்குழு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது.



இன விடுதலைக்கான போராட்டத்தின் வரலாறு என்ற கருப்பொருளுடன் இந்தப் திரைப்படம் உருவாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் ராமதாஸ் கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமார் நடிக்கவுள்ளதாகவும், லைகா நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  

Tags:    

Similar News